மன்னார்: இலங்கை உதைப்பாந்தாட்ட சம்மேளனத்தினால் மன்னார் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு உதைப்பந்துகள் வழங்கும் நிகழ்வுகள் இடம் பெற்றன. விளையாட்டுத் துறை அமைச்சின் வன்னி மாவட்ட தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹூனைஸ் பாருக் இதனை வழங்கி வைத்தார்.
மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம். சியான் தலைமையில் வலயக் கல்விப் பணிமனையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.
வன்னி மாவட்டத்தின் விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், விளையாட்டின் மூலம் மாவட்டத்தின் ஒற்றுமையினை கட்டியெழுப்ப முடியும் என்று தாம் நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் உரையாற்றும் போது கூறினார்.
குறிப்பாக வன்னி மாவட்டத்தில் உள்ள மன்னார், வுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் உதைப்பந்தாட்ட துறையின் ஊக்கத்திற்கான வேலைத்திட்டங்களை விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் அமைச்சர் றசாத் பதியுதீன், மற்றும் உதைப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஆகியாருடன் இணைந்து முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒவ்வொரு பாடசாலைகளும் தமது விளையாட்டுத்துறையின் சாதனைகளை இந்த தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் எடுத்துக் காட்டும் வகையில் செயற்படுவது அவசியம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் இங்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



Leave a comment