-பழுளுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: கடந்ந யுத்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களது சொந்தக் காணிகளை விட்டு வெளியேறிய சகல பொது மக்களினதும் சொந்தக்காணிகளை தற்போது அக்காணிகளில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாவிட்டால் மீண்டும் அக்காணிகளை இன முறுகல் ஏற்படாதவாறு மீள ஒப்படைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும் பொருளாதார அரிவிருத்திப் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
தற்போது மாவட்டத்தில் நிகழும் காணிப்பிரச்சினை தொடர்பான அவசரக் கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ல்ஸ் தலைமையில் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வாகரைப் பிரதேச செயலகப்பிரிவின் காரமுனை, ஆனைசுட்டமடு ஆகிய பிரதேச மக்களின் காணிப்பிரச்சனை தொடர்பாக அதிக கவனம் எடுக்கப்பட்டது. இதனையடுத்து அப்பிரதேச மக்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் தங்கள் பிரச்சினைகளை முன் வைத்ததனையடுத்து அது தொடர்பாக உடனடி நடவடிக்ககை எடுக்கப்படும் எனவும் முதற்கட்டமாக அப்பிரதேச மக்களின் போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றுவதற்குத் தேவையான சகல வசதிகiயும் பெற்றுத் தருவதாக பிரதேச மக்களிடம் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மாவட்ட அரச அதிபர்; பி.எஸ்.எம் சார்ல்ஸ், மாவட்டத்திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன்,வாகரை பிரதேச செயலாளர் ராகுல நாயகி, பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் முஹம்மட் ருஸ்வின், வாகரை பிரதேச தலைவர் அப்துல்லாஹ், பிரதிஅமைச்சரின் ஊடக செயலாளர் எம்.எஸ்.எம் சஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Leave a comment