காத்தான்குடி: இன்று பி.ப காத்தான்குடிக்கு வெளியில் இடம்பெற்ற மாணவி மீதான காத்தான்குடி நகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினரும் பொருளியல் ஆசிரியருமான HMM. பாக்கீர் அவர்களின் பாலியல் பலாத்கார முயற்சியின் பின்னர், பாக்கிரின் வீட்டுக்கு தற்பொழுது பொலிஸார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
தனது வகுப்பிற்கு வரும் தனது உறவு முறை மாணவியை கல்முனைக்கு விசேட வகுப்பிற்காக தனது காரில் அழைத்துச் செல்கிறேன் எனக் கூறி, மாணவியை அழைத்துச் சென்றவேளையிலேயே இசசம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
இச்சம்பவத்தின் பின்னர் ஊரின் அரசியல் பிரமுகர்கள், அவசரமாக ஒன்றுகூடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன உறுப்பினர்கள், முக்கிய பள்ளிவாயல்களின் நிர்வாக சபை உறுப்பினர்களைச் சந்தித்து பாக்கிரின் விடயமாக மேற்கொள்ளப்பட்ட சமர முயற்சிகள் நேரம் போதாமையினால், பிற்போடப்பட்டிருக்கின்றது.
இதற்கிடையில் பொதுமக்களின் வேண்டுகோளிற்கிணங்க, ஒன்றில் பாக்கிரை பொலிஸில் பிடித்துக் கொடுப்பது அல்லது பள்ளிவாயலுக்கு கொண்டு வருவது என தீர்மானிக்கப்ட்டிருந்தது. எனினும் இவ்விடயத்தை பள்ளிவாயல் ரீதியாக தீர்க்குமாறு பொதுமக்களில் அதிகமானோர் கேட்டதற்கிணங்க, புதிய காத்தான்குடி ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபை, குறித்த விடயத்தை விசாரிப்பதற்கு முன்வந்திருப்பதாகவும், உரியவரை அழைத்து வருமாரும் கேட்டிருக்கின்றனர்.
சம்பவம் இடம்பெற்ற பின்னர் பாக்கீர் மற்றும் மாணவியை பொதுமக்கள் பொலிஸில் ஒப்படைத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து பாக்கீர் விடுதலை செய்யப்பட்டிருந்ததுடன், குறித்த மாணவியை மருத்துவமனையில் அனுமதித்து பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸார் உத்தரவிட்டனர்.
இதன்பின்னர் ஊரில் ஏற்பட்ட சிற்சிறு கலவரங்களின் அழுத்தத்தின் காரணமாகவும், குறித்த மாணவியின் முறையீடு காரணமாகவும் பொலிஸார் பாக்கீரை தேடி வருகின்றனர்.
காத்தான்குடியில் எங்கோ ஓர் இடத்தில் தான் தலைமறைவாக இருப்பதாக தனக்கு நெருங்கிய முக்கிய பிரமுகர்களுக்கு சற்று முன்னர் தொலைபேசி மூலமாக தெரியப்படுத்தி இருந்ததாகவும் தெரியவருகிறது.
இதற்கிடையில், பாக்கீரின் வீட்டைச் சுற்றி இளைஞர்கள் பலர் நின்றிருந்ததும், கலவரங்களை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டதையும் தொடர்ந்து, பாக்கீரின் வீட்டிற்கு தற்பொழுது பொலிஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
பாக்கீர் விடயத்தில் அவரது ஆழும் கட்சி உறுப்பினர்கள் சார்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் பிரபல சமூக சேவையாளருமான கே.எல்.எம். பரீட் அதிக பிரயத்தனம் எடுத்து, குறித்த சம்பவம் விடயமாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும், பாக்கீரை பள்ளிவாயலுக்கு அழைத்து வந்து பொதுமக்கள் முன்னிலையில் நிறுத்துவதற்கும் முயற்சி எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற இவ்விடயமாக மேற்கொண்டு பாக்கீர் ஆசிரியரின் தைத்தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தபோதும் அவரிடமிருந்து எவ்வித பதில்களும் எமக்குக் கிடைக்கவில்லை.
இது விடயமாக தற்பொழுது இரகசிய விசாரணைகள் அரசியல் வட்டாரங்களில் இடம்பெற்றுவருவதாகவும், மாணவியிடம் குறித்த அரசியல் பிரமுகர்கள் சென்று சந்தித்து, ஆறுதல்கள் கூறி வந்ததாகவும் தெரியவருகிறது.
எப்படி இருந்த போதிலும் ‘தன்னை பாக்கீர் ஆசிரியர் பலாத்காரம் செய்ய முற்பட்டார்’ என்ற செய்தியை மாணவி இதுவரை வாபஸ்பெறவில்லை என்பது உண்மையானதே!
நேற்று பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்ட ஒலிபரப்பு நிகழ்வில் அதிதி ஒருவராக கலந்துகொண்டிருந்த பாக்கீர், மட்டக்களப்பு ஓட்டமாவடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1992ல் இருந்து பொருளியல் பாடத்தை தனியார் வகுப்புக்கள் மூலமாக காத்தான்குடியில் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் அவ்வப்போது பதிவேற்றப்படும்.


Leave a reply to yaseer Cancel reply