தமிழ்வின் இணையத்தளத்தின் முஸ்லிம்கள் மீதான துவேசத்தனமான குற்றச்சாட்டுக்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தியத்தின் விளக்கம்

–  இர்ஷாத் றஹ்மத்துல்லா

13_rem_palm-1_49029_435[1]முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியாவளப் பகுதியில் தற்காலிக கொட்டில்கள் சில இனந்தெரியாதவர்களால் எரியூட்டப்பட்ட  சம்பவமொன்றில் பொலீஸ் விசாரணை இடம் பெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சம்பவம் இடம் பெற்று சில நிமிடங்களில் தமிழ் வின் இணையத்தளம் அமைச்சர் றிசாத் பதியுதீனை சம்பந்தப்படுத்தி வெளியிட்ட செய்தி தொடர்பில் கடும் கண்டனங்கள் தமிழ் வின்னுக்கு எதிராக எழுந்துள்ள நிலையில்,  தமிழ் வின் இணையத்தளத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக நெறிப்படுத்தப்பட்ட முறையில் பிரசுரிக்கப்பட்டுள்ள கருத்துக்களை குறித்து முல்லைத்தீவு மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியம் தமது விளக்கத்தை வாசகர்களுக்கு சமர்பிக்கின்றது.

இவ்வாறான முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள். சிங்கள பௌத்த இனவாதத்தையும் விஞ்சுகின்ற அளவிற்கு துவேஷ விசத்தை கக்கும் அளவிற்கு புலிகளின் எச்ச சொச்சங்களான இனத் துவேஷத்தை சுவாசிக்கின்றவர்கள்இஇனங்களுக்கிடையில் முறுகல் நிலையினை தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர் என்பதை இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மூலம் புலப்படுகின்றது.

தெற்கில் சேனாக்கல் முஸ்லிம்களுக்கு எதிராக பிரசாரம் செய்ய, வடக்கிலும் முஸ்லிம்களுக்கு எதிராக சேனாக்கல் உருவாகுவதை இது காட்டுகின்றதா?அவ்வாறாயின் இவ்விரு சேனாக்களுக்குமிடையில் தொடர்பை ஏற்படுத்தும் பின்னணியில் தான் இந்த குடிசை எரிப்பு இடம் பெற்றுள்ளனவா? என்ற கெள்வி எழுந்துள்ளது.

அதே வேளை அண்மையில் உதயன் பத்திரிகை அலுவலகம் எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், அரசாங்கம் அந்த பிரச்சினையினை உள்வீட்டு பிரச்சினை என்று கூறியதை தொடர்ந்து, கோபவேஷத்தோடு சீறிப்பாய்ந்த ஊடகங்கள், முல்லைத்தீவில் இடம் பெற்ற  தீ வைப்பு சம்பவத்தையடுத்து மறுகனமே அமைச்சர் றிசாதையும், பூர்வீக முஸ்லிம்களையும் அவமானப்படுத்தும் அநியாயத்தை செய்துள்ளதை எவ்வாறு பார்க்க வேண்டும் என்று அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் வின் இணையத்தில் வந்த சில அசிங்கமான வார்த்தைகளை நாம் இதில் இணைத்துக் கொள்ளமுடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளோம் என்பதை மனவேதனையுடன்  தெரிவித்துக் கொள்கின்றோம்
இணையத் தளத்தில் வந்தவை-

•  Sri Lanka முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் பொருட்கள் வாங்கவேண்டாம்

முஸ்லிம் மக்கள் பொருளாதார, அரசியல் ரீதியாக வளர்ச்சி கொண்டுள்ளார்கள் என்பது யாவரும் அறிந்ததே அதுக்காக நாம் என்றும் பொறாமைப் பட்டதும் இல்லை மாறாக அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு நாமும் துணையாக இருந்து வருகின்றோம் ஆனால் அதே அரசியல் பொருளாதார பலத்தை வைத்துகொண்டு மிகவும் சூட்ச்மாக,  நயவஞ்சமாக எம்மை அழிக்க நினைகின்றார்கள் என்பது அண்மைய பல ஆதாரங்கள் எமக்கு உணர்த்துகின்றன.

கிழக்கில் ஒரு முஸ்லிம் தனது நிலையான சொத்துக்களை தமிழ் மக்களுக்கு விற்க்க முடியாது அதையும் மீறி விற்றால் அந்த முஸ்லிம் பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப் படமாட்டார்.உன்மையில் துவேசிகள்இ மதவாதிகள் இ சூட்சிகாரர்கள் இங்கே யார்?

எனவே நாம் விழித்துகொள்ளவேண்டும். இப்படிப்பட்டவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு நாம் துணையாக இருந்துகொண்டு எமது மக்களை 3ம் தரப்பாக அடிமை வாழ்க்கை வாழ வைப்பதா? அகிம்சை வழியில் சிந்திப்போம். செயற்படுவோம் உறவுகளே!

Published by

Leave a comment