காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் கூடுதலான இளைஞர்களை கொண்ட காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் 21.04.2013 நேற்று காத்தான்குடி அந்-நாஸர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஒன்றியத்தின் அங்கத்துவ இளைஞர்களுக்கான தர்பியா நிகழ்வு காத்தான்குடி மர்கஸினுடைய விரிவுரையாளர் பாயிஸ் மௌலவியினால் உரை நிகழ்த்தப்பட்டதுடன் சென்ற மார்ச் மாதம் காத்தான்குடியில் இடம்பெற்ற கலாசார கண்காட்சியில் தொண்டர்களாக பங்குபற்றிய ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்ட சான்றிதல் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஹாரிஸ் ஜேபியினாலும் சிரேஷ்ட உறுப்பினர்களாலும் வழங்கி வைக்கப்பட்டது.





Leave a comment