பாடசாலையின் முன்னேற்றித்திற்கு அதிபர்,ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவை அவசியம் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

hizbullah[1]பழுளுல்லாஹ் பர்ஹான்

பாலமுனை: ஓரு பாடசாலை அல்லது ஒரு நிறுவனம் முன்னேற வேண்டுமானால் அவற்றின் தலைமைத்துவம் உறுதிமிக்க அர்ப்பணிப்புள்ள தலைமைத்துவமாக இருக்க வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

நேற்று பாலமுனை கிராமத்தில் இயங்கும் பாலமுனை -அஷ்ரப் வித்தியாலயத்தின் 2013ஆண்டு வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை புதிய பாலமுனை முகைதீன் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் கே.எல்.ஏ.ஹைறுல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,

வசதி வாய்ப்புக்கள், பொருளாதார அபிவிருத்திகள் குறைவாக உள்ள பிரதேசமான பாலமுனையில் இயங்கும் பாலமுனை அஷ்ரப் வித்தியாலயம் 2012ம் ஆண்டு முதற்தடவையாக ஜீ. சீ. ஈ. சாதாரண தரப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டு இம்மறை முதலாவதாக வெளியான பெறுபேறுகளைப் பார்க்கும் போது எல்லாப் பாடங்களிலும் 85சதவீதமான சித்தியைப் பெற்றுள்ளதுடன் 5பாடங்களில் எல்லா மாணவர்களும் 100வீத சித்தியைப் பெற்றுள்ளனர்.

பின்தங்கிய பிரதேசமாக இருந்தாலும் சிறப்பாக கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு பிரதேசமாக பாலமுனை காணப்படுகின்றது. ஒரு பாடசாலையின் முன்னேற்றத்திற்கு பிரதான பங்கு வகிப்போர் அதிபர் உள்ளிட்ட நிர்வாகிகள். அவர்கள் அவர்களுடைய கடமைகளை சரிவற நிறைவேற்றினால் பாடசாலை நிச்சயமாக முன்னேரும். எதிர்காலத்தில் இந்தப்பாடசாலைக்குத் தேவையான சகல தேவைகளையும் கட்டடத் தேவைகளையும் பூர்த்தி செய்யவுள்ளோம் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment