காத்தான்குடி: தேசத்துக்க மகுடம்2013 வேலைத்திட்டத்திற்கு அமைவாக அமைச்சர் பஷில் ராபக்ஷவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு வீதி’ வீதி எனும் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள 03உள்ளக கொங்றீட் வீதிகள் இன்று சனிக்கிழமை மாலை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டன.
இதன்போது மட்டக்களப்பு கல்முனை பழைய வீதி காத்தான்குடி 04 மரைக்கார் ஒழுங்கை, புதிய வாசிகசாலை வீதி, பஷீர் வீதி உள்ளிட்ட மூன்று வீதிகள் திறந்து வைக்கப்பட்டதாக பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் எம். எஸ். எம். சஜி தெரிவித்தார்.
இவ்வைபவத்தில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்,காத்தான்குடி நகர சபை பிரதித் தவிசாளர் ஜெஸீம், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. எல். எம். பரீட் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடியில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் பல்வேறு வீதிகள் புனரமைக்கப்பட்டு கொங்றீட் இடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment