காங்கேயனோடை அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நேற்று இடம்பெற்றது

Yourkattankudy
Yourkattankudy

பழுளுல்லாஹ் பர்ஹான்

காங்கேயனோடை: மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் காங்கேயனோடை பிரதேசத்திற்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் மாவட்டப் பிராந்தியக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காங்கேயனோடை பிரதேசத்தின் கடந்தகால,தற்கால மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாக மிக நீண்ட நேரம் ஆராயப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபை பிரதித்தவிசாளர் ஜெஸீம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. எல். எம். பரீட் உட்பட காங்கேயனோடைப்பிரதேசத்தின் அபிவிருத்திக்குழுவின் பொறுப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரதேசத்தில் முன்னர் இடம்பெற்ற அபிவிருத்தி தவறுகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் அவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் இருக்கவும் அமைச்சரினால் கண்டிப்பான உத்தரவு விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

One response to “காங்கேயனோடை அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நேற்று இடம்பெற்றது”

  1. திட்டங்கள் வருவதென்பது உண்மைதான்…. ஆனால் அபிவிருத்தி திட்டங்கள் ஏன் நடக்காமல் இருக்கின்றன…? இதற்கு என்ன காரணம்…? இதற்கு யாரெல்லாம் காரணம்…? என்பதைப்பற்றி ஒரு 10 நிமிடம் ஆராய்ந்தால் இன்ஷா அல்லாஹ் கான்கேயநோடைக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும்…. அல்லாஹ் போதுமானவன்.

Leave a comment