
பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும் உற்பத்தித்திறன் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியும், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான யு. எல். எம். என். மூபீனின் 2012 ஆண்டுக்கான கிழக்கு மாகாண சபையின் வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் 231 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக மண்னெண்னெய் அடுப்பு வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிராந்திய காரியாலயத்தில் மூபீன் பவுன்டேசன் நிறுவனத்தின் தலைவர் அப்துல் லத்தீப் ஜே.பி தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட உற்பத்தித்திறன் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரி யு. எல். எம். என். மூபீனினால் 220 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக மண்னெண்னெய் அடுப்பு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி அல் அமீன் வித்தியாலய பிரதி அதிபர் யாஸீர் அறபாத், சமுர்த்தி வலய முகாமையாளர் சுல்மி மற்றும் உற்பத்தித்திறன் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியின் இணைப்பாளர் தௌபீக் ஹாஜி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், உலமாக்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
உரையினைக் கேட்க ‘கிளிக்’ செய்யவும்.
Leave a comment