சிங்கள, தமிழ் சித்திரை புத்தாண்டு நாடு பூராகவும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் வங்கி கிண்ணியா கிளையிலும் புதுவருட நிகழ்வு நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம். ஹில்மி கலந்து கொண்டு புதுவருட தினத்தன்று வங்கியில் வைப்புச் செய்தவர்களுக்கு அன்பளிப்புக்களையும் வழங்கி வைத்தார்.
நிகழ்வில் கிழக்கு பிராந்திய முகாமையாளர் வலிதுர், மக்கள் வங்கி கிண்ணியா கிளை முகாமையாளர் எம்.எம்.எம்.நியாஸ், வங்கி ஊழியர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



Leave a comment