கொழும்பு: இலங்கை மாணவர்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் ‘மெக்ஸ்ட்’ திட்டத்தின் கீழ் 2014ஆம் ஆண்டுக்கு புலமைப் பரிசில்களை வழங்கவுள்ளது. இவை பட்டப்பின் படிப்பு ஆராய்ச்சி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழிநுட்பக் கல்லூரி ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படவுள்ளது.
இந்த புலமைப் பரிசில்களை பெற விரும்புவோர் தமது விண்ணப்பங்களை மே 3ஆம் திகதிக்கு முன் உயர் கல்வி அமைச்சிற்கு அனுப்ப வேண்டும்.
உயர் கல்வி அமைச்சும் கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகமும் இணைந்து நடத்தும் பரீட்சையின் அடிப்படையிலேயே தெரிவுகள் நடைபெறும்.
மேலதிக விபரங்களை http://www.mohe.gov.lk எனும் இணையத் தளத்தின் ஊடாக அறிய முடியும்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment