
பழுலுல்லாஹ் பர்ஹான்
ஒல்லிக்குளம்: மட்டக்களப்பு கர்பலா நகரில் இயங்கிவரும் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒல்லிக்குளம் பாக்கியதுஸ் ஸாலிஹாத் பள்ளிவாயல் வளாகம் மனித நேயம் பேணும் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் தலைவர் என்.எச்.ஏ.றஷீட் தலைமையில் இடம்பெற்ற இவ் சிரமதான நிகழ்வில் பாக்கியதுஸ் ஸாலிஹாத் பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் எம்.ஏ.அபுல் ஹஸன் மற்றும் ஸ்டார் இளைஞர் சமூக சேவை உறுப்பினர்கள் , பள்ளிவாயல் மஹல்லா வாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு மட்டக்களப்பபு மாவட்டத்தில் மன்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கர்பலா,சிகரம் ,ஒல்லிக்குளம் ஆகிய முஸ்லிம் குக் கிராமங்களில் பாரிய சிரமாதனப் பணிகளை செய்து வருவதோடு மட்டுமன்றி கர்பலா கிராமத்தில் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக இலவச குர் ஆன் மத்தரசா ஒன்றும் இலவச பிரத்தியேக பாட வகுப்புகளும் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment