– பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: தமிழ்-சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் புது வருட கை விஷேடம் மற்றும் வறிய மாணவர்களுக்கான பாடசாலை அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் நிகழ்வும் புதுவருட தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (ஆர்.டி.பி.) பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் கே.சத்தியநாதன் தலைமையில் இடம்பெற்றது.
தமிழ்-முஸ்லிம்,கிறிஸ்தவ மதப் பெரியார்களின் மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமான இவ் புதுவருட புத்தாண்டு நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் கே.சந்தானம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பிரதேச அபிவிருத்தி வங்கியின் புது வருட கை விஷேடம் , பிரதேச அபிவிருத்தி வங்கியின் மணித்தியாலயத்திற்கு மணித்தியாலம் பரிசுப் பொதிகள் மற்றும் வறிய மாணவர்களுக்கான பாடசாலை அப்பியாசக்கொப்பிகள் வழங்கல் ஆகிய நிகழ்வுகளில் வெற்றி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு பரிசுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் கே.சந்தானம், பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் கே.சத்தியநாதன் மற்றும் தமிழ்-முஸ்லிம்,கிறிஸ்தவ மதப் பெரியார்கள் ,பிரதேச அபிவிருத்தி வங்கி அதிகாரிகள் ,வாடிக்கையாளர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.



Leave a comment