முஸ்லிம்களை புண்படுத்தும் செயற்பாடுகள் குறித்து நிதானம் தேவை- ஜுனைட் நளீமி

???????????????????????????????– பழுளுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: நேற்று முஸ்லிம்கள் விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு செயளாலருடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது ஒரு விடயம் பாதுகாப்பு செயளாலரிடம் முன்வைக்கப்பட்டது. முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில் முக்கிய பொருப்புவாய்ந்த அமைச்சர்கள் சிலர் கருத்துக்களை வெளிpயிடுவது கவலையளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு பிரதேசங்களில் அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் நிருவனங்கள் தமது உற்பத்திகளையும் சந்தைப்படுத்த முனவதாக எடுத்துக்கூறப்பட்டது. உதாரணமாக இரண்டு நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு பகுதியில் எட்னா சொகலேட் உற்பத்தி நிருவனம் பன்றியின் உருவம் அச்சிட்ட சொகலேட் வகைகளை சந்தைப்படுத்த முனைந்தனர் என அந்த சொகளேட்டின் மாதிரி கான்பிக்கப்பட்டது.

SANYO DIGITAL CAMERA

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயளாலர் இது சிலவேளை சந்தைப்படுத்தினர்களின் கவணயீனமான அச்சிப்பதிப்பாக இருக்க முடியும். இதனால் இந்நிருவனமே நஷ்ட்டத்தை அடையும் என குறிப்பிட்டு இதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார். 

???????????????????????????????

ஹலால் தொடர்பான பிரச்சிணைக்கு அமைச்சரவையின் முடிவினை எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில் இவ்வாரன விடயங்களை எவ்வாரு முஸ்லிம் சமூகம் கையாள வேண்டும் என்ற வழிகாட்டளை புத்திஜீவிகள் பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய தேவை இருக்கின்றது. பன்றியை அச்சிட்டு வெளியிடப்படும் பொருற்கள் முஸ்லிம்களது உள்ளங்களை புண்படுத்துவது போல் ஆடு, மாடு என பல உருவங்கள் பதிக்கப்பட்டு அச்சிடப்பட்டு சந்தைப்படுத்தப்படும் பொருற்கள் இறைச்சிக்கடைகளின் காட்சிப்படுத்தல் போன்ற விடயங்கள் மாற்றின சமூகத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கும் விடை சொல்லவேண்டிய தயார் நிலை காலத்தேவையாகும். ஹாலால் குறியீடு வேண்டாம் என்று வாதிடும் தரப்பினர் தற்போது விளம்பரங்களில் மதுசாரம் அற்றது என விளம்பரப்படுத்தும் முரணான யுக்திகளும் இன்று சந்தையில் கானக்கூடியாதகவே உள்ளது.

???????????????????????????????

இது இவ்வாறிருக்க முஸ்லிம்களை புண்படுத்தும் விடயங்கள் தொடர்பில் கவலை கொள்ளும் நாம் மாற்றின சமூகத்தின் உணர்வுகளை புன்படுத்தாத வகையில் பள்ளிவாசல் ஒலி பெருக்கி பாவனை, மத வழிபாட்டுத்தளங்கள் அமைத்தல் என்பன தொடர்பிலும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய தேவைப்பாடும் உள்ளது.

இது குறித்து தெளிவினை மக்களுக்கு சொல்லவேண்டியது புத்திஜீவிகளது தார்மீக கடமையாகும்.

Published by

Leave a comment