கொழும்பு: புத்தாண்டு மற்றும் தவணை விடுமுறை காலப்பகுதிக்குள் நாடு முழுவதிலும் உள்ள 5000 சிறுவர் நேய பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாடசாலை ஒன்றுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபா வீதம் ஐயாயிரம் பாடசாலைகளுக்கும் 250 கோடி ரூபா நிதியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ்- சிங்கள புத்தாண்டு விடுமுறை காலப்பகுதிக்குள் நாடு முழுவதிலும் சமகாலத்தில் இந்த சிறுவர் நேய பாடசாலைகளை புனரமைக்கும் மற்றும் அபிவிருத்தி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நவீன வசதிகள், ஆய்வு கூடங்களைக் கொண்ட ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் 409 பாடசாலைகளின் நிர்மாண வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மேலும் 175 பாடசாலைகள் உலக வங்கி உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் 255 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜுலை மாதம் முதல் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றார்.
மேற்படி பாடசாலைகளுக்குத் தேவையான விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலப் பாட ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
![school_build_200_150[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/school_build_200_1501.jpg?w=150&h=112)
Leave a comment