மட்டக்களப்பு: சஊதி அரேபியாவில் மரணதண்டனைக்குள்ளான றிஸனாநபீக்கின் ஜனாசாவை (சடலத்தை) இலங்கைக்கு கொண்டு வர எந்தவொரு பெண்னுரிமை அமைப்புக்களும் நடவடிக்கை எடுக்கவில்லை யென மட்டக்களப்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் பிரதிநிதியும் ஓட்டமாவடி அன்பு இதயம் எனும் நிறுவனத்தின் பெண்கள் அபிவிருத்தி பிரிவின் தலைவியுமான ஜனாபா எம். சபீக்கா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று முன் தினம் நடைபெற்ற வன்முறைக்கெதிரான பெண்கள் வலையமைப்பின் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே சபீக்கா மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு நெக்டப் கட்டிடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சபீக்கா சஊதி அரேபியாவில் கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி இலங்கையின் மூதுரைச் சேர்ந்த றிஸானா நபீக் மரண தண்டனைக்குள்ளானார்.
அவரின் ஜனாசாவை (சடலத்தை) அவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் பார்ப்பதற்கு விரும்பிய போதும் ஜனாசா இங்கு அனுப்பப்படவில்லை.
இது எல்லோருக்கும் வேதணையை தந்தது. இங்கு பல் வேறு பெண் செயற்பாட்டாளர்கள், மற்றும் பெண்கள் அமைப்பக்கள் இருந்தும் மூதூர் றிஸானாவின் ஜனாசாவை இலங்கைக்கு கொண்டுவர எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெண்கள் அமைப்புக்கள் மிகவும் உற்சாகமாக செயற்பட வேண்டும்.
இன்று நமது நாட்டிலும் பெண்களுக்கெதிரான வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் இடம் பெற்று வருகின்றனர். சிலர் அவைகளில் ஈடுபட்டு விட்டு தப்பித்து கொள்கின்றனர். இன்னும் சிலர் சட்டத்தின் பிடியிலிருந்தும் தப்பித்துக் கொள்கின்றனர்.
இப்படியானவர்களுக்கு சட்டம் சரியான தண்டனையை வழங்க வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தப்பகுதியில் 14வயது சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர்கள் தப்பித்துக்கொண்டதாக அறிய முடிகின்றது. இந்த
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெண்கள் அமைப்புக்கள் கவனமெடுத்து செயற்பட வேண்டுமென அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.


Leave a comment