நஸீர் ஹாபிஸ் பௌண்டேசன் மூலமாக க.பொ.த உயர்தர வகுப்புகளில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு நிதி வழங்கும் வைபவம்

eravur (2)
BY: FM. Farhan

– பழுளுல்லாஹ் பர்ஹான்
 
ஏறாவூர்: நஸீர் ஹாபிஸ் பௌண்டேசன் மூலமாக கல்விப் பொது தராதர சாதாரண, உயர்தர வகுப்புகளின் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு உதவி நிதி வழங்கும் வைபவம் இன்று காலை 12.04.2013 வெள்ளிக்கிழமை ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஓய்வு பெற்ற அதிபர் எம்.எஸ்.அபுல்ஹசன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் நசீர் ஹாபிஸ் பௌண்டேசன் தலைவரும் கிழக்கு மாகாண, விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி, மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான அல்ஹாஜ் ஹாபிஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம்.ஹனீபா, விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மத்திய கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஹாஜியானி எஸ்.ஏ.நஸிரா, ஏறாவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆப்தீன் உட்பட வலய பாடசாலையின் அதிபரும் கலந்து கொண்டனர்.

 இந்த நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் இருந்த தெரிவு செய்யப்பட்ட 53 மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் நஸீர் அஹமட் உட்பட அதிதிகள் புலமைப் பரிசில்களை வழங்கி வைத்தனர்.

 இந்த வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனதுரையில் ‘இந்தப் புலமைப் பரிசில்களை பெற்றுக் கொள்ளும் மாணவ மாணவிகள் எதிர் வரும் சாதாரணதரப் பரீட்சையில் 09 பாடங்களிலும் ஏ சித்தி பெறும் மாணவர்களுக்கும் உயர்தரப் பரீட்சையின் 03 பாடங்களில் ஏ சித்தி பெறும் மாணவர்களுக்கும் தங்கள் இறுதி வரை கல்வியை தொடர்வதற்கு உரிய அனைத்து செலவுகளையும் நசீர் அஹமட் பௌன்டேசன் மேற்கொள்வதொடு இம்மாணவர்களின் பெற்றோர்களுக்கு ரூபா 50000/- வழங்குவதாகவும் உறுதியளித்தார். மாணவர்கள் கல்வியின் பொறுப்பை உணர்ந்து கல்வி கற்பது தங்களது பொறுப்பு என்றும் சுட்டிக்காட்டினார்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment