கொழும்பு: க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் ஆங்கில பாட வினாத்தாளுக்கு தோற்றும் மாணவர்களுக்கு எழுத்து மூல பரீட்சைக்கு மேலதிகமாக உரையாடல் மற்றும் கிரகித்தல் பரீட்சைகளும் நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார். 2015 ம் ஆண்டிலிருந்து இந்த புதிய நடைமுறை அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.
சங்கீத பாட பரீட்சைக்கு எழுத்து மூல பரீட்சைக்கு மேலதிகமாக செயல்முறை பரீட்சை நடத்துவது போன்று ஆங்கில பாடத்துக்கும் செயல்முறை பரீட்சைகள் நடத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஆங்கில பாட செயல்முறை பரீட்சைக்குத் தோற்றுபவர்களுக்கு மேலதிகமாக 10 புள்ளிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-தினகரன்
Leave a comment