‘மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற முடியாது’

130410005638_noose_304x171_bbc_nocredit[1]டில்லி: தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு கைதியொருவர் விடுத்த வேண்டுகோளை இந்திய உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. டில்லியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தேவிந்தர் பால் சிங் புல்லர் கைதுசெய்யப்பட்டார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட தேவிந்தர் பால் சிங் புல்லர் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்துவிட்டதால் அவருக்கு மரண தண்டனை அளிப்பது நியாயமில்லை என்று அவரது வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.

ஆனால் அந்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள், வீரப்பன் கூட்டாளிகள்

ஏற்கனவே கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள 17 பேர் இந்தியச் சிறைகளில் உள்ளனர்.

அண்மைக்காலம் வரை இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றுவது மிகவும் அரிதாகவே நடந்துவந்தது.

எனினும் 8 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் கடந்த நவம்பரில் இருந்து இந்தியா மரண தண்டனைகளை நிறைவேற்றத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மூன்று பேருக்கும் கண்ணிவெடித் தாக்குதல் தொடர்பில் வீரப்பன் கூட்டாளிகள் நால்வருக்கும் மரண தண்டனை அளிக்கப்பட்டன.

இவர்களின் தண்டனைகள் நீதிமன்ற உத்தரவினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-BBC/Tamil

Published by

Leave a comment