-தமிழகத்திடம் இலங்கை கலைஞர்கள் கோரிக்கை-
கொழும்பு: இலங்கையின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு தமிழகத்திடம் இலங்கை கலைஞர்களின் தேசிய அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களைக் கண்டித்தும் இலங்கையின் உண்மை நிலைமையை நேரில் வந்து பார்க்குமாறும் வலியுறுத்தி இலங்கையின் நடிகர்- நடிகைகள் நேற்று திடசங்கற்ப பூஜை நடத்தினர்.
இலங்கை கலைஞர்களின் தேசிய அமைப்பு ஏற்பாடு செய்த இந்த திடசங்கல்ப பூஜை சுதந்திர சதுக்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. பெரும் எண்ணிக்கையிலான கலைஞர்கள் இதில் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக தென்னிந்திய திரையுலக கலைஞர்கள் அண்மையில் முன்னெடுத்த போராட்டத்தைப் போன்றே இந்த திடசங்கற்ப பூஜை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment