மலேரியா என்பது நோய் பரப்பி அல்லது நோய்க்காவி வாயிலாக பரவும் தொற்றுப்பண்புடைய ஒரு தொற்று நோயாகும். இது முதற் கலவுரு ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படுகிறது.
அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆபிரிக்கா ஆகிய பகுதிகளையும் சேர்த்து வெப்பமண்டலம் சார்ந்த மற்றும் மித வெப்ப மண்டல பிரதேசங்களிலும் இது பரவலாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 350 முதல் 500 மில்லியன் வரையிலான மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றில் ஒன்றிலிருந்து மூன்று மில்லியன் மக்கள் இந்த நோயினால் இறக்கிறார்கள். இந்த நோயின் காரணமாக இறப்பவர்களில் அதிகமானவர் சப் சஹாரா, ஆபிரிக்காவில் இருக்கும் இளம் குழந்தைகளாவர்.
மலேரியா தொடர்பாக ஏற்படும் இறப்புகளில் 90 சதவீத இறப்பு சப்-சஹாரா ஆபிரிக்காவில் நிகழ்கிறது. மலேரியா பொதுவாக வறுமையுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது. ஆனால் இது வறுமைக்கு காரணமாகவும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாகவும் இருக்கிறது.
மிகவும் பொதுவான தொற்று நோய்களில் மலேரியாவும் ஒன்றாகும். இது பொதுச்சுகாதாரத்திற்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பேரினம் பிளாஸ் மோடியம் (மலேரியா நோய்க்காரணி) என்னும் முதற் கலவுரு ஒட்டுண்ணிகளினால் இந்த நோய் ஏற்படுகிறது. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியின் ஐந்து வகை இனங்கள் மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம். நோயின் மிகவும் கடுமையான தன்மை பிளாஸ்மோடியம். பால்ஸிபாரத்தனால் ஏற்படுத்தப்படுகிறது. பிளாஸ்மோடியம் விவக்ஸ் (ஜிlasசீo னீiuசீ vivax) பிளாஸ்மோடியம் ஓவலே (ஜிlasசீoனீiuசீ olalலீ) மற்றும் பிளாஸ்மோடியம் மலேரியா ஜிlasசீo னீiuசீ சீalariaலீ) ஆகியவற்றின் காரணத்தினால் ஏற்படும் மலேரியா மனிதர்களுக்கு மிகவும் இலேசான நோய்த் தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.
இதற்கு பொதுவாக கொல்லும் தன்மை இல்லை. ஐந்தாவது இனமான பிளாஸ்மோடியம் நோலெசி (ஜிlasசீ oனீiuசீ knowlலீsi) குட்டை வால் குரங்குகளுக்கு மலேரியா நோய்த் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மனிதர்களுக்கும் நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம். மனிதர்களுக்கு நோய் விளைவிக்கும் தன்மையைக் கொண்ட இந்த வகை பிளாஸ்மோடியம் இனங்கள் வழக்கமாக மலேரியா ஒட்டுண்ணிகள் என்று கருதப்படுகின்றன.
வழக்கமாக நோய்க்காவியான பெண் அனோஃபிலிஸ் (திnophலீlலீs) நுளம்பு மக்களைக் குத்துவதன் மூலம் மலேரியா நோய் ஏற்படுகிறது. அனோஃபிலிஸ் நுளம்புகளினால் மட்டுமே மலேரியா நோய் மற்ற வர்களுக்கு பரவுகிறது.
நோய்த்தொற்று ஏற்பட்ட ஒரு நபரிடமிருந்து இரத்த உணவை உட்கொள்ளும் போது, அவை அவரிடமிருந்து நோய்க்காரணியான பிளாஸ்மொடியும் ஒட்டுண்ணியைப் பெற்று வெறொரு நபரில் இரத்த உணவை உண்ணும்போது அவருக்கு அந்நோயை கடத்துகின்றன.
நோய்த் தொற்றுடைய நுளம்பு ஒரு நபரைக் குத்தும் போது சிறிய அளவு இரத்தத்தை எடுத்து கொள்கிறது. அந்த இரத்தத்தில் நுண்ணிய மலேரியா ஒட்டுண்ணிகள் இருக்கின்றன. சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு அந்த நுளம்பு அதனுடைய அடுத்த இரத்த உணவை எடுத்துக் கொள்வதற்காக மற்றொரு நபரைக் குத்தும் போது இந்த ஒட்டுண்ணிகள் நுளம்பின் உமிழ்நீரில் கலந்து அந்த நபருக்கு செலுத்தப்படுகிறது. இந்த ஒட்டுண்ணிகள் இரத்த சிவப்பணுக்களில் பெருக்கமடைந்து ஏற்படுத்தும் அறிகுறிகளாவன:
இரத்தச் சோகை (தலை இலேசாக இருப்பதுப் போல் உணருதல், சுவாசித்தலில் சிரமம் ஏற்படுதல், இதயத் துடிப்பு மிகைப்பு, இன்னும் பல).
மற்ற பொது அறிகுறிகளாவன:
காய்ச்சல், கடுங்குளிர், குமட்டல், மற்றும் சில நோயாளிகளுக்கு நோய் தீவிரம் அடைவதன் காரணத்தினால் ஆழ்மயக்கம் (கோமா) மற்றும் மரணம் நேரிடலாம்.
நுளம்பு வலைகள் மற்றும் பூச்சி விலக்கிகள் ஆகியவற்றின் மூலம் நுளம்பு குத்தாமல் தடுக்கலாம் அல்லது வீடுகளுக்கு உள்ளே பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தல் மற்றும் நுளம்புகள் முட்டையிடும் தேங்கு தண்ணீரை வடித்து அகற்றுதல் போன்ற கட்டுப்பாடு நடவடிக்கைகள் மூலம் மலேரியா நோய்த்தொற்று பரவுதலை குறைக்கலாம். பல வித்தியாசமான முறைகளின் மூலம் மலேரியா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப் பதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. அவை சிறிது வெற்றியும் கொடு த்தன. நுளம்புகளுக்கு ஒட்டுண்ணியை எதிர்க்கும் சக்தியை உருவாக்குவதற்காக நுளம்புகளுக்கு மரபியல் ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்படுவதும் கருத்தில் கொள்ளப்பட்டன.
சில தடுப்பு மருந்துகள் உருவாக் கத்திலிருந்தாலும் மலேரியாவிலிருந்து முழுவதுமாக பாதுகாப்பு தரும் தடுப்பு மருந்து எதுவும் தற்போது கிடைப்பதில்லை. நோய்த்தொற்றின் ஆபத்தை குறைப்பதற்கு தடுப்பு மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆண்டு முழுவதும் நோய் தோன்றும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்த ப்ரோஃ பிலாக்டிக் (நோய் வருவதற்கு முன்னதாகவே தடுக்கும் மருந்துப் பொருள்) மருந்து சிகிச்சைகள் அதிகமான செலவை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
ஆண்டு முழுவதும் நோய் தோன்றும் பகுதிகளில் வசிக்கும் வயது வந்தவர்கள் பலருக்கு நீண்ட கால நோய்த்தொற்று இருக்கிறது. இந்த நோய் திரும்ப திரும்ப ஏற்படுவதனால் இவர்களுக்கு அந்நோய்க்குரிய நோய் எதிர்பாற்றல் முறைமை (நோய் எதிர்ப்பு திறன்) ஏற்படுகிறது. சில நாட்கள் கழித்து இந்த தடுப்பாற்றல் குறைந்துவிடும். இந்த வயது வந்தவர்கள் ஆண்டு முழுவதும் நோய் தோன்றாத பகுதிகளில் சில நாட்கள் கழித்திருந் தார்களானால் இவர்களுக்கு கடுமையான மலேரியா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
நோய் தோன்றும் பகுதிகளுக்கு இவர்கள் திரும்பவும் வருவதாக இருந்தால், நோய் வராமல் தடுப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
குயினைன் அல்லது ஆர்டிமிஸினின் மூலம் செய்யப்பட்ட மருந்துகள் போன்ற மலேரியா எதிர்ப்பு மருந் துகளைப் பயன்படுத்தி மலேரியா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக் கப்படுகிறது. எனினும் இதுபோன்ற பல மருந்துகளை எதிர்க்கும் தன்மை யுடையதாக ஒட்டுண்ணிகள் உருவாக் கப்பட்டுள்ளன. இதனால் உலகத்தின் சில பகுதிகளில் சிறிய அளவிலான மருந்துகளே மலேரியாவின் சிகிச்சைகளில் பயனுள்ளதாக இருக்கிறது.
மலேரியாவின் அறிகுறிகளாவன:
காய்ச்சல், உடல் நடுக்கம், மூட்டுவலி (மூட்டுகளில் வலி ஏற்படுதல்), வாந்தி, இரத்தச் சோகை (இரத்தமழி தலினால் ஏற்படுகிறது), ஈமோகுளோபின், நீரிழிவு, விழித்திரை சேதமடைதல், மற்றும் வலிப்புகள், சுழற்சி முறையில் ஏற்படும் திடீர் குளிரைத் தொடர்ந்து குளிர் நடுக்கம் ஏற்படும். அதன் பிறகு காய்ச்சலும் வியர்வையும் 4 முதல் 6 மணி நேரம் வரை இருக்கும் இவை மலேரியாவின் முதல் நிலை அறிகுறிகளாகும்.
விவக்ஸ் மற்றும் ஓவலே நோய்த் தொற்றுகளாக இருந்தால் ஒவ்வொரு இரண்டு நாட்களும் இது போன்று ஏற்படும். மலேரியா நோய்த்தொற்றாக இருந்தால் ஒவ்வொரு மூன்று நாட்களும் இது போன்ற அறிகுறிகள் ஏற்படும். பால்சி பாரத்தனால் ஏற்படும் நோய்த்தொற்றாக இருந்தால் ஒவ்வொரு 36 முதல் 48 மணி நேரங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரங்களுக்கு காய்ச்சல் திரும்பத் திரும்ப வரும் (விட்டு விட்டு) மற்றும் காய்ச்சல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கலாம்.
மலேரியாவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வழக்கத்திற்கு மாறாக உடல் இருக்கை நிலையை வைத் திருப்பது போல் காணப்படுவார்கள். மூளை கடுமையாக பாதித்ததன் காரணத்தினாலும் இது இருக்கலாம். அறிந்து கொள்ளும் அறிவாற்றலை மலேரியா பாதிப்பதாக கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. மூளை வளர்ச்சி அதிவேகமாக இரு க்கும் காலத்தின் போது இரத்த சோகையையும் நேரடி மூளை பாதிப்பையும் இது ஏற்படுத்துகிறது. குழந்தைகள் மிகவும் எளிதாக பாதிப்படையக் கூடிய பெருமூளைச் சிரைக்குரிய மலேரியாவினால் நரம்பியல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. பெருமூளைச் சிரைக்குரிய மலேரியா விழித்திரை வெண்மையாகுதலுடன் தொடர்புடையதாக இருக்கிறது. மற்ற காய்ச்சலிலிருந்து இந்த அறிகுறி தான் இந்த நோயை வேறுபடுத்திக் காட்டுகிறது.
மலேரியாவின் கடுமையான நோய்த் தாக்கத்தை ஃபால்ஸிபாரம் நோய்த் தொற்று தான் அதிகமாக ஏற்படுகிறது. வழக்கமாக நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு 6 முதல் 14 நாட்களில் இந்த நோய் தீவிரமடையும். ஆழ்மயக்கம் (கோமா) மற்றும் இறப்பு ஆகியவை மலேரியாவின் கடுமையான நோய் நிலையின் விளைவுகளாகும். மலேரியா நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படா விட்டால் இளம் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் எளிதில் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. மண்ணீரல் பிதுக்கம் (மண்ணீரல் விரிவடைதல், பெரிதாகுதல்), கடுமையான தலைவலி, பெருமூளைச் சிரையில் குருதியோட்டக்குறைவு ஏற்படுதல். ஈரல் பெருக்கம் (ஈரல் விரிவடைதல்), சீனிக் குறைவு மற்றும் சிறுநீரக செயலிழப்புடன் ஈமோ குளோபின் நீரிழிவு ஏற்படலாம். சிறுநீரக செயலிழப்பு காரணத்தினால் சிதைவடைந்த இரத்த சிவப்பணுக் களிலிருந்து ஈமோகுளோபின் சிறுநீர் வழியாக வெளியாகும். மலேரியாவின் கடுமையான நோய் நிலை மிகவும் விரைவாக அதிகரித்து சில மணி நேரங்கள் அல்லது நாட்களுக்குள் மரணத்தை ஏற்படுத்திவிடலாம்.
தீவிர பராமரிப்பு மற்றும் சிகிச்சையில் இருந்தும் கூட அதிகமான நேரங்களில் கடுமையான நோய்த்தாக்கம் இருக்கும் நோயாளிகள் மத்தியில் நோய் இறப்பு வீதம் 20 சதவீதத்திற்கும் அதிகமாகி விடுகிறது. ஆண்டு முழுவதும் நோய் தோன்றும் பகுதிகளில் கொடுக்கப்படும் சிகிச்சை திருப்தியளிக்கக்கூடியதாக இல்லை.
இரத்தத்தில் நுண்ணுயிர்கள் மறைந்து விட்டதைப் பார்த்துவிட்டு மலேரியா நோய் குணமாகிவிட்டது என்று விவரிப்பது தவறாக இருக்கலாம். விவக்ஸ் நோய்த்தொற்றின் மிகவும் நீண்ட நோய்க்காப்பு காலம் 30 வரு டங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிதமான காலநிலையுள்ள பகுதிகளில் ஏறக்குறைய விவக்ஸ் மலேரியா நோயாளிகளில் ஒருவருக்கு ஹிப்னோ சோயட்டுகளால் பொறுத்திருந்து தாக்குதல் ஏற்படுகிறது.
அதாவது, நுளம்பு கடித்த பிறகு உள்ள ஆண்டிலிருந்து நோய் மறுபடியும் வர ஆரம்பிக்கும்.
பேரினம் பிளாஸ்மோடியத்தின் முதற்கலவுரு ஒட்டுண்ணிகளினால் மலேரியா ஏற்படுகிறது. நோய்த்தொ ற்று ஏற்பட மிகவும் பொதுவான காரணமாக இருப்பது ஃபால்சிபாரம் ஆகும். மலேரியா நோயாளிகளில் சுமார் 80 சதவீதமானோருக்கு மலேரியா நோய்த்தொற்று வர இது காரணமாக இருக்கிறது. மலேரியா நோயினால் இறப்பவர்களில் சுமார் 90 வீத இறப்பிற்கு இது காரண மாக இருக்கிறது.
பறவைகள் ஊரும் விலங்ககள் (ஊர்வன), குரங்குகள், சிம்பன்சிகள் ஆகியவைகளுக்கும் ஒட்டுண்ணி சார்ந்த பிளா ஸ்மோடியம் இனங்கள் நோய்த்தொற்றை ஏற் படுத்துகின்றன. மலேரி யாவின் பல சிமியன் இனங்கள் மனித நோய்த் தொற்றுகளுடன் தொட ர்புடையதாக ஆவணப் படுத்தப்பட்டுள்ளன.
கோழிக்குஞ்சுகளுக் கும் வான்கோழிகளுக்கும் ஏவியன் மலேரியா உயிரிழப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலும் கூட பண்ணைகள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்புகள் எதுவும் அதிகளவில் இந்த நோய் ஏற்படுத்திவிடாது. எனினும் மனிதர்களுக்கு தற்செயலாக ஏற்பட்ட இந்த நோய் ஹவாயில் ஆண்டு முழுவதும் இருக்கும் பறவைகளை அதிதிகமாகக் கொன்றுவிட்டது. அந்த பறவைகளுக்கு ஏவியன் மலேரியாவை எதிர்க்கும் சக்தி இல்லாததே இதற்கு காரணமாக உள்ளது.
அனோபிலிஸ் பெண் நுளம்புகளே நோய் பரப்பிகளாகும். ஒரு நோய்த்தொற்றுடைய மனிதனிடமிருந்து இளம் நுளம்புகள் உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் முதலில் மலேரியா ஒட்டுண்ணிகளை உறிஞ்சிக்கொள்கிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட அனோபிலிஸ் நுளம்புகள் பிளாஸ்மோடியம் வித்துயிரிகளை அதனுடைய உமிழ் நீர்ச்சுரப்பிகளின் மூலம் எடுத்துச் செல்கிறது.
ஒரு நோய்த்தொற்றுடைய மனிதரிடமிருந்து இரத்த உணவை எடுத்துக் கொள்ளும் போது ஒரு நுளம்புக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. ஒட்டுண்ணி புணரிச்செல்கள் உறிஞ்சப்பட்டவுடனேயே இரத்தத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆண் அல்லது பெண் புணரிகளாக மேலும் வேறுபடுத்தப்பட்டு, நுளம்பின் குடலில் கலந்து விடுகிறது. இது நகரண்டத்தை உற்பத்தி செய்து குடல் அகவுறையில் ஊடுருவி சென்று குடல் சுவரில் அண்டப்பந்தை உற்பத்தி செய்கிறது. அண்டப்பந்தில் பிளவு ஏற்படுவதனால் வித்துயிரிகள் வெளியாகின்றன.
இந்த வித்துயிரிகள் நுளம்பின் உடல் வழியாக உமிழ் நீர்ச்சுரப்பிகளுக்கு சென்று மற்றொரு நபருக்கு (நோய் தொற்று இல்லாத மனிதனுக்கு) நோய்த்தொற்றை பரப்ப தயாராக இருக்கிறது. இந்த வகையான நோய் பரவல் முந்தைய மாற்றம் என்று கருதப்படுகிறது. நுளம்பு அதனுடைய அடுத்த உணவை எடுத்துக்கொள்ளும் போது உமிழ் நீருடன் வித்துயிரிகளையும் சேர்த்து உட்செலுத்துகிறது. பெண் நுளம்புகள் மட்டுமே இரத்தத்தை உணவாக எடுத்துக்கொள்ளும். ஆகையால் ஆண் நுளம்புகள் நோயைப் பரப்பாது. நுளம்பின் பெண் அனோபிலிஸ் இரவில் தான் தன்னுடைய உணவை எடுத்துக்கொள்ளும். அவை பொதுவாக மாலைப் பொழுதில் தான் உணவைத்தேட ஆரம்பிக்கும். அதற்குத் தேவையான உணவு கிடைக்கும் வரை இரவு முழுவதும் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கும். மலேரியா ஒட்டுண்ணிகள் இரத்தம் ஏற்றலின் மூலமாகவும் பரவலாம். இந்த வகையான நோய் பரவல் மிகவும் அரிய ஒன்றாகும்.
– தினகரன்

Leave a comment