கொழும்பு: முஸ்லிம் சமூகப்பிரதிநிகளுக்கும், பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபக்ஷவுக்குமிடையிலான உயர் மட்ட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இவ் உயர் மட்ட கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய முஸ்லிம் சம்மேளனங்கள் மற்றும் உலமா சபை பிரதிநிதிகள் முஸ்லிம் சமய பண்பாட்லுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய காரியாலயப் பொறுப்பாளர் ஜூனைட் நளீமி தலைமையில் மட்டக்களப்பு வளையுறவு விமான நிலையத்தில் இருந்து விஷேட விமானம் மூலம் பயனமாகியுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்லுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய காரியாலயப் பொறுப்பாளர் ஜூனைட் நளீமி தெரிவித்தார்.
இன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெறும் கலந்துரையாடலில் கிழக்கு மாகாணம் மற்றும் ஏனைய மாவட்டங்களிலுளள்ள முஸ்லிம் சமய பிரதிநிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பாக்கப்படுகின்றது.

Leave a comment