ரைஸ்
கிண்ணியா: கிண்ணியா கச்சக்கொடுத்தீல் திவிநெகும புதுவருட சந்தை நேற்று ஆரம்பமானது. திருகோணமலை மாவட்ட கமநல சேவை திணைக்களத்தின் உதவி ஆணையாளர் புனித குமாரின் அழைப்பின் பேரில் கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி கமநல சேவை நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.றியால் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட திவிநெகும சந்தை நேற்று 2013.04.10 ஆம் திகதி புதன்கிழமை கச்சக்கொடுத்தீவில் வெகுவிமர்சையாக ஆரம்பமானது.
சந்தையினை கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி மற்றும் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் எஸ்.எல்.எம்.ஜவாதுள்ளா ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு சந்தையினை ஆரம்பித்து வைத்தனர். நிகழ்வுக்கு கிண்ணியா விவசாய சங்க தலைவர்கள், அங்கத்தவர்கள், திருகோணமலை பயிலுனர் பட்டதாரிகள், கமநல சேவை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு இலாபகரமான முறையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதனால் நுகர்வோர் பொருட்களை இலாபகரமான முறையில் கொள்வனவு செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a comment