பலாங்கொடை: பலாங்கொடையில் தப்தர் ஜெய்லானி| என்றழைக்கப்படும் கூரகல பிரதேசத்துக்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை விஜயம் செய்து புராதனமிக்க தொல்லியல் பகுதிகளைப் பார்வையிட்டார்.
எல்லாவல தேரர் உட்பட மஹா சங்கத்தினர்- உலமாக்கள்- தேசிய புலனாய்வுப்பிரிவுத் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரன-தொல்பொருள் ஆய்வு நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்களும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.
சுமார் இருபது நூற்றாண்ணடுகால பழைமை வாய்ந்ததும் சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்ததுமான அப்பகுதியை பாதுகாப்பு செயலாளர் சுற்றிப் பார்வையிட்டார்.
அங்கு குழுமியிருந்தவர்களிடையே உரையாற்றpய பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ- இனங்களுக்கிடையே சமாதானத்தை பேனிப்பாதுகாப்பதுடன் தொல்லியல் முக்கியத்துவமிக்க புனித பிரதேசத்தையும் பாதுகாக்கவேண்டும் எனக்குறிப்பிட்டார்.
-அரசாங்க தகவல் திணைக்களம்
![balangoda-2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/balangoda-21.jpg?w=630&h=419)
![balangoda-3[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/balangoda-31.jpg?w=630&h=419)
![balangoda-5[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/balangoda-51.jpg?w=630&h=419)
Leave a comment