மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் சேவையில் குற்றங்களை ஒழித்து திறமையான சேவை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களின் சேவையுணர்வுகளைப் பாராட்டி பொலிஸ் திணைக்களத்தால் 82 பேருக்கு இன்று (10.04.2013) பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் மற்றும் வெகுமதிகள் வழங்கி கௌவரவிக்கப்பட்டன.
மட்டக்களப்பு தேவநாயகம் கலை அரங்கில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரகோன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறமை காட்டிய பொலிஸாருக்கும், உதவி வழங்கிய பொது மக்களுக்கும் பணப்பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதகுருமார்களும் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வீ. இந்திரன் உட்பட பொது மக்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
2013 ம் வருடம் பல பொலிஸ் பொலிஸ் கடமையளில் திறமை காட்டிய பொலிஸாருக்கு இந் நிகழ்வில் 606 சேவைகளுக்கு 11 இலட்சத்து 79 ஆயிரம் ரூபா நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

Leave a comment