5 வருடங்களின் பின்பு ஆரையம்பதி இராமக்கிருஷ்ண மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்ந இல்ல விளையாட்டுப் போட்டி

– பழுளுல்லாஹ் பர்ஹான்

arayampathi (2)ஆரையம்பதி: ஆரையம்பதி இராமக்கிருஷ்ண மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்ந இல்ல விளையாட்டுப் போட்டி 5 வருடங்களின் பின்பு ஆரையம்பதி இராமகிருஷ்ண மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மைதானத்தில் நேற்று பாடசாலை அதிபர் திருமதி.தங்கவடிவேல் தலைமையில் நடாத்தப்பட்டது.

இராமகிருஷ்ணர், விவேகானந்தர், விபுலானந்தர் என 3 இல்லங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். இப் போட்டியில் 2013 ஆம் வருடத்திற்கான சம்பியனாக இராமகிருஷ்ணர் இல்லம் தெரிவு செய்யப்பட்டது.

arayampathi

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுபாச்சக்கரவர்த்தி, கௌரவ அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ. பிரசாந்தன், பிரமுகர்கள் மற்றும்பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

arayampathi (2)

arayampathi (3)

Published by

Leave a comment