முஸ்லிம்கள் பாதிக்கப்படும்போது பொருட்படுத்தாமல் இருக்க முடியாது

r.sambandan[1]கொழும்பு: முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் இடைஞ்சல்களை பெரும்பான்மையான சிங்கள மக்கள் அனுமதிக்கவில்லை. எமது சகோதர முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினை ஏற்படுகையில் அது குறித்து எம்மால் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றத் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, முஸ்லிம் மக்கள் ஏனைய சமூகங்களுடன் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக கசப்பான சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன. அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிட முயற்சி நடைபெறுகிறது. முஸ்லிம்கள் அணியும் உடை தொடர்பிலும் பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராக குரோதத்தை தூண்டி வருவதைத் தடுக்க வேண்டும். ஒவ்வொரு வரும் தாம் விரும்பிய மதத்தை பின்பற்ற உரிமை உள்ளது. அதனை மதிக்க வேண்டும். இனங்களிடையே நல்லிணக் கத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

இதன்போது பிரதி அமைச்சர் அப்துல் காதர், ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. ஆகியோர் எழுந்து நின்று கோஷம் எழுப்பி இடையூறு செய்தனர். வடக்கில் இருந்து முஸ்லிம்களை புலிகள் துரத்தினதாகவும் காத்தான்குடியில் முஸ்லிம்கள் கொல்லப் பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

-தினகரன்

Published by

Leave a comment