காத்தான்குடியில் சமுர்த்திப் பயனாளிகளின் நலன்கருதி நடமாடும் சேவை

???????????????????????????????– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடியில் சமுரத்திப் பயனாளிகளின் நலன்கருதி நடமாடும் சேவை நோக்கில் சமுர்த்திக் கொடுப்பனவுகள் புதிய காத்தான்குடி பதுறியா விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள காரியாலயத்தில் இன்றும் நாளையும் வழங்கப்படவுள்ளதாக காத்தான்குடி சமுர்த்தி முகாமையாளர் எம்.ஐ.எம்.சுல்மி தெரிவித்தார்.

திவிநெகும விற்பனைச் சந்தை இன்று புதிய காத்தான்குடி பதுறியா விளையாட்டரங்கில் இடம்பெறுவதால் குறித்த நடமாடும் சேவை இடம்பெறுகிறது.

இதன் ஆரம்ப வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சமுர்த்திப் பயனாளிகளுக்கு கொடுப்பணவுகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஈ.குணரட்ணம், காத்தான்குடி பிரதேச உதவிப் பிரததேச செயலாளர் அஹமட் அப்கர்,காத்தான்குடி பிரதேச உதவித்திட்டமிடல் பணிப்பாளர் கருணாகரன்,சமுர்த்தி வங்கிச் சங்க சங்க முகாமையாளர எம்.ஏ.எம்.சுல்மி உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.

இந்நடமாடும் சேவையில் காத்தான்குடி சமுர்த்திப் பிரிவு,புதிய காத்தான்குடி சமுர்த்திப்பிரிவு என பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டன.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment