மட்டக்களப்பு விமானப்படை முகாமில் விஷேட சிங்கள, தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

Yourkattankudy
Yourkattankudy

பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: இலங்கை விமானப்படையின் மட்டக்களப்பு முகாம் ஏற்பாடு செய்த விஷேட சிங்கள தமிழ்- புத்தாண்டு நிகழ்வுகள் இன்று 09-04-2013செவ்வாய்க்கிழமை காலை இப்படை முகாம் வளவில் இடம்பெற்றது.

இப்படை முகாம் கட்டளையிடும் அதிகாரி விங்க் கொமாண்டர் டப்ளியூ.எம்.ஏ.பி.வெவேகம் தலைமையில் இடம்பெற்ற இந்த சிங்கள தமிழ் – புத்தாண்டு நிகழ்வில் பாரம்பரிய முறையிலான கிராமமொன்று ஸ்தாபிக்கப்பட்டு புத்தாண்டு உணவுகள் பரிமாறப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகள் சிங்கள தமிழ்- புத்தாண்டை பிரதிபளிக்கும் பால் பொங்கலுடன் ஆரம்பமாகின.பாரம்பரிய கிராமிய விளையாட்டுக்கள் இடம் பெற்றதுடன் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதில் பிரதேச மக்களும் விமானப்படை உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு முட்டி உடைத்தல், ஊஞ்சள் ஆடுதல், ரபான் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment