தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நடமாடும் சேவை காத்தான்குடி காரியாலயத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது

2013-04-08 09.35.38டீன் பைரூஸ்

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்  நடமாடும் சேவை நேற்றும் இன்றும் ( 08,09-04.2013 )தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்புச் சபையின் காத்தான்குடி காரியாலயத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

மேற்படி  நடமாடும் சேவை  காலை 9.00மணி தொடக்கம் மாலை 4.00மணிவரை நடைபெற்றது. பொது மக்களின் நலன் கருதி  நடமாடம் சேவையின் போது  தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு கல்லடி காரியாலயத்தின் அதிகாரிகள்  மற்றும் காத்தான்குடி காரியாலயத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு பணியாற்றினர்.

இந்நடமாடும் சேவையின் போது  அதிகமான பொது மக்கள் மிகவும் பிரயோசனம் அடைந்து கொண்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனா்.  இதன் போது புதிய நீர் இணைப்புக்கான விண்ணப்பப்படிவம் விநியோகித்தல்,  புதிய நீர் இணைப்பு பெற்றுக் கொடுத்தல், நீர் இணைப்பு சம்பந்தமான முறைப்பாடுகள், தகவல்கள் வழங்கல் போன்ற பல வேறு விடயங்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டன.

மேற்படி நடமாடும் சேவைக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம். பரீட் JP அவா்களும் சரூகமளித்திருந்தார்.

2013-04-08 09.35.382013-04-08 09.38.522013-04-08 09.36.282013-04-08 09.41.19DSC000212013-04-08 09.39.57

Published by

Leave a comment