கிண்ணியா: தமிழ் சித்திரை புத்தாண்டு இம்மாதம் 13, 14 ஆம் திகதி மலரவிருக்கும் தருணத்தில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக திவிநெகும சந்தை கிண்ணியா பிரதேச செயலக செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் தலைமையில் நேற்று பைசல் நகர் அல் இர்பான் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.
இந்நிகழ்வினை கிண்ணியா நகரசபை நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி அதிதியாக கலந்து கொண்டு சந்தையினை நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சீ.முஸ்இல், சமுர்த்தி வங்கி முகாமையளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





Leave a comment