க.பொ.த சா/தரப் பரீட்சையில் மாணவா்களின் திறமை சித்திக்கு உறுதுணையாக இருந்த அதிபா், ஆசிரிய, ஆசிரியைகளைப் பாராட்டி கௌரவித்தார் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட்.JP

DSC00010  டீன் பைரூஸ்

 காத்தான்குடி: முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம். பரீட். JP  அவா்கள் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மாணவா்களின் திறமைச் சித்திக்கு உறுதுணையாக இருந்த  அதிபா், ஆசிரிய, ஆசிரியைகளைப் பாராட்டி கௌரவிக்கும் முகமாக  ( 09.04.2013 செவ்வாய்க்கிழமை ) காத்தான்குடி, காங்கயனோடை, பாலமுனையில், பூநொச்சிமுனை ஆகிய  பாடசாலைகளுக்கு நேரடியாகச் சென்று தனது வாழ்த்துக்களையும் பரிசில்களையும் வழங்கினார்.  

காத்தான்குடி பரீட் பௌண்டேசனின் ஏற்பாட்டில்  மாணவா்களின் நலன் கருதி வருடா, வருடா இலவசக் கல்வி கருத்தரங்குகள், விசேட கல்வி கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றனர். அந்த வகையில் இம்முறையும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவா்களுக்கு விசேட கல்வி கருத்தரங்குகள், முன்னோடிப் பரீட்சை என்பன போன்றவற்றை  காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தினில் நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

.   DSC00010DSC00011DSC00008DSC00005DSC00004DSC00003DSC00002DSC00001DSC00012DSC00013DSC00016

Published by

Leave a comment