பழுளுல்லாஹ் பர்ஹான்
கொழும்பு: அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின்(ஏ.சீடீ.ஜே)2013ம் ஆண்டுக்கான பகுதி நேர ஹிப்ழ்ப்பிரிவிற்கு புதிய மாணவ மாணவிகளை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறித்த ஹிப்ழ் வகுப்புக்கு சேர விரும்பும் மாண மாணவிகள் எதிர்வரும் 14.04.2013ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 09 தெமட்டகொடவில் அமைந்துள்ள அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் தலைமையக மஸ்ஜிதில் இடம்பெறவுள்ள நேர்முகப்பரீட்சையில் கலந்து கொள்ளுமாரு அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் எம்.ஆர்.எம்.பாயிஸ்(பாகவி)தெரிவித்தார்.
திறமையாக அல்குர்ஆனை ஓதத்தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு 23, ஸ்கூல்லேன், தெமட்டகொட, கொழும்பு -09 எனும் முகவரியினூடாக அல்லது 0115230280 | 0115230281 | 0112698050 எனும் தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொள்ளுமாரு விண்ணப்பதாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Leave a comment