– பழுளுல்லாஹ் பர்ஹான்
ஏறாவூர்: ஏறாவூர் பள்ளிவாசல் முஸ்லிம் நிருவனங்களின் ஏற்பாட்டின் பேரில் ஏறாவூர் பகுதியில் இஸ்லாமிய மார்க்க பிரச்சாரங்களை மேற்கொள்ளும் அமைப்புக்களிடையே கருத்தொறுமைப்பாட்டு செயற்திட்டம், சமூகங்களுக்கிடையேயான சகவாழ்வினை கட்டியெழுப்பலும் அதற்கான தடைகள் பற்றி ஆராய்வதற்குமான கலந்துரையாடல் ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டடத்தில் சம்மேளன தலைவர் அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்றது.
இதில் ஏறாவூர் ஜம்மியதுல் உலமா சபை பிரதிநிதிகள் இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஜும்மா பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் ஆகியோர் களந்து கொண்டனர். விஷேட கருத்துறை வழங்குவதற்காக அஷ்ஷெய்க் ஜுனைத் நளீமியும் கலந்து கொண்டு நாட்டில் தற்போது இடம்பெரும் முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சிணைகளுக்கு நாம் களம் அமைக்கும் நடவடிக்கைகள் ஆரோக்கியமானதல்ல என குறிப்பிட்டார்.
பிரதேச இஸ்லாமிய மைப்புக்கள் புறிந்துணர்வுடன் செயற்படுதல், புதிதாக அமைக்கப்படும் பள்ளிவாசல்கள் தொடர்பில் கலந்தாலோசனை மேற்கொள்ளல், ஒலி பெருக்கி பாவனை தொடர்பில் தீர்மானங்களாக எட்டல் போன்ற பின்வரும் விடயங்கள் பற்றி பேசப்பட்டது.

இன்னும்பல விடயங்கள் பேசப்பட்டபோதும் எதிர்காலங்களில் இவ்விடயங்கள் தொடர்பாக இறுதியான முடிவுகளை எட்டுவது என தீர்மானிக்கப்பட்டது.
நடந்து முடிந்த கலந்துறையாடல் முழு இலங்கை முஸ்லிம் சமயத்தினருக்கும் முன்னுதாரண நடவடிக்கையாக அமைந்துள்ளது.
Leave a comment