– பாஸி பஹ்ஜான்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நேற்று வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் தற்போதய பெறுபேறுகளின்படி தமிழ்மொழி மூலம் 9ஏ சித்திகளை 21 பேரும் ஆங்கில மொழி மூலம் 9ஏ 4 பேரும் தமிழ்மொழி மூலம் 8ஏ 1பி சித்திகளை 6 பேரும் ஆங்கில மொழி மூலம் 8ஏ 1பி சித்திகளை 5 பேரும் தமிழ்மொழி மூலம் 7ஏ 2பி சித்திகளை 5 பேரும் ஆங்கில மொழி மூலம் 7ஏ 2பி சித்திகளை ஒருவரும் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை அதிபர் திருமதி ஆர்.கனகசிங்கம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
பட விளக்கம் -மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்ற 25 மாணவர்கள், 8ஏ 1பி சித்திகளை 11 மாணவர்கள், 7ஏ 2பி சித்திகளை 6 மாணவர்கள் பாடசாலை அதிபர் திருமதி ஆர். கனகசிங்கம் மற்றும் உப அதிபர்கள், ஆசிரியஆசிரியர்கள் ஆகியோரை மேற்படி படங்களில் காணலாம்.


Leave a comment