நிமிடத்துக்கு நிமிடம் தன் கொள்கைகளை மாற்றிக் கொண்டு தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் பொது பல சேனா அமைப்பு, கடந்த வாரம் பெசன் பக் முஸ்லிம் வர்த்தக நிலையத்தை தாக்கியதன் பின்னர் இவர்களின் பின்னணி தெட்டத் தெளிவாக உலகுக்கு எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது.
மூளையற்ற, சிந்தனையற்ற தங்களது செயலால் இரகசிய கமராவில் அப்பட்டமாக இத்தாக்குதலுக்கு யாரெல்லம் பின்பலத்துடன் செயற்பட்டிருந்தனர் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டியதன் பின்னர், அரச பலத்துடன் இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் இரு தரப்பு ‘சமரசத்துடன்’ விடுவிக்கப்பட்டிருந்தனர்.
தனது மடைமையை உணர்ந்தும் உணராத பொது பல சேனா தற்பொழுது தமிழர்களின் பக்கம் குரல் கொடுக்க முயற்சித்து வருகின்றது. முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து வழங்குவதாக இன்று கொக்கரித்திருக்கின்றது.
ஹலால் விடயத்தில் கைவைத்து அரச ஆதரவுடனும் எங்கள் முஸ்லிம் தலைமையின் பலவீனத்திலும் ருசி கண்டிருந்த பொது பல சேனா, முஸ்லிம் பெண்களின் ஆடை விடயத்தில் கடந்த மாதம் கைவைப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று தழிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க முன்வந்திருக்கும் பொது பல சேனாவின் செயற்பாட்டில், பொது பல சேனாவை யாரோ ஓர் பலமிக்கவர் அல்லது ஓர் குழு வழி நடாத்தி வருவது தெட்டத் தெளிவாகின்றது.
முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல் இவர்களின் பின்னணி மறைக்கப்பட்டாலும், இவர்களின் செயற்பாட்டின் பின்னரான ஊகங்கள் எமக்கு அள்ளி வைக்காவிட்டாலும் கிள்ளி வைப்பது புலனாகின்றது.
சிறுபான்மையின் ஒற்றுமையில் மீண்டும் புகை மண்டளத்தைக் கிளப்பி அதன் பின்னர் தனது இலக்கை அடைவதற்கு எச்சில் ஊரிய தனது நாக்கை தொங்கவிட்டுக் கொண்டிருக்கின்றது காவியுடை வேட்டை நாய்கள். இரையாகுவதற்கு முன்னர் சிறுபான்மைத் தலைவர்கள் விழித்தெழ வேண்டுமே தவிர, வழி விடக்கூடாது!

Leave a comment