திருச்சி: இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாடு மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பாதுகாப்பு நிமித்தம் கல்லூரிகள் காலவரையரையன்றி முடப்பட்டிருந்தன. எனினும் காலவரையின்றி மூடப்பட்ட கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில் கல்லூரிகளில் மாணவர்கள் கறுப்பு பட்டி அணிந்து வகுப்புகளுக்கு சென்றனர்.
நேற்று காலை திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஐ.ஜி.அலுவலகம் எதிரே உள்ள தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கே அமைச்சர் சல்மான் குர்ஷித் உருவபொம்மையை எரித்தனர்.இதனை தொடர்ந்து போராட்டம் நடத்திய மாணவர்கள் அங்கிருந்து புறப்பட்டு திருச்சியில் உள்ள இலங்கைக்கு சொந்தமான மிஹின் லங்கா விமான டிக்கெட் முன்பதிவு அலுவலகத்துக்குச் சென்று, அங்கு இலங்கை அரசை கண்டித்து கோஷமிட்டபடி திடீரென்று அலுவலகத்துக்கு உள்ளே புகுந்து தரையில் அமர்ந்தனர்.
இந்த அலுவலகத்தை இழுத்து மூடும் வரை போராடுவோம் என்று கோசமிட்டு, அங்கு கலகத்தை மேற்கொள் முயற்சித்தனர். இதனால் பொலிஸார் வரவழைக்கப்பட்டு உரிய மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியும் பேச்சுவார்த்தை பலனளிக்காமல் மீண்டும் மாணவர்கள் மிஹின் லங்கா அலுவலகத்தில் கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பொலிஸார் 11 ஆர்ப்பாட்ட மாணவர்களை கைது செய்து தங்களது வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர்.
![Mihin Lanka[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/mihin-lanka1.jpg?w=150&h=132)
Leave a comment