பொது பல சேனா எனும் இனவாத அமைப்பை தடை செய்யக் கோரி கல்முனை மாநகரசபையில் கண்டனப் பிரேரணை

bothu– பழுளுல்லாஹ் பர்ஹான்

கல்முனை: தற்காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக இயங்கி வரும் பொது பல சேனா எனும் இனவாத அமைப்பை தடை செய்யக் கோரி கல்முனை மாநகர சபையில் கடந்த 28ம் திகதி இடம்பெற்ற சபை அமர்வில் கண்டன பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் சபை அமர்வு கடந்த 28 வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது பொது பல சேனா இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் தரப்பு உறுப்பினர் ஐ.எல். பிர்தௌஸினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து இந்தக் கண்டனப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Published by

Leave a comment