– ரைஸ்

கிண்ணியா: திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகரமானது கடல் நீரேரிகளையும் பசுமை வயல்களையும் கொண்டு அழகு நிறைந்ததாக சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரக்கூடியதுமான அமைப்பைக் கொண்டுள்ளதால் அவற்றை கருத்தில் கொண்டதான கலந்துரையாடல் கிண்ணியா நகரபிதா டொக்டர் எம்.எம். ஹில்மி ஏற்பாட்டில் நகரபிதா தலைமையில் நகரசபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
தற்போதைய காலகட்டத்தில் கிண்ணியாவை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தோடு, கிண்ணியாவில் அதிகரித்து வரும் கழிவுகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தி அவற்றை பயனுள்ளதாக அமைக்கும் நோக்கிலுமான திண்மக்கழிவு முகாமைத்துவம் சம்பந்தமான கலந்துரையாடல் நகரசபை எல்லையை மையப்படுத்தியதாய் அமைந்திருந்தது.
இதில் கிண்ணியா – மட்டக்களப்பு (தோனா) பிரதான வீதியின் கரையோரத்தினை அழகுபடுத்தல் மற்றும் கிண்ணியா நகரத்தை அழுகுபடுத்தல் போன்றவற்றோடு இப்பிரதேசங்களில் சேகரிக்கப்படும் கழிவுகளை பயனுள்ளதாக அமைத்தல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதோடு அவை கையாளப்டவுள்ள விதங்களும் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.
இங்கு நகரபிதா பேசும் போது ‘ நகரபிதாவாக பதவியேற்ற பின் நகரசபைக்குட்பட்ட பெரும்பாலான வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டதோடு பல புதிய வீதிகளும், கல்வெட்டுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு நகரசபைக்கட்பட்ட பகுதிகளுள்ள கழிவுகள் சேகரிக்கப்பட்டு அது பயனுள்ளதாக அமைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில் தற்போது இப்பிரதேசம் சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரக்கூடியதாகவுள்ளது. இதனால் இப்பிரதேசத்தை அழகுபடுத்த வேண்டிய தேவைப்பாடு அவசியமாகவுள்ளது. அதன்பொருட்டு இங்கு வருகை தந்திருக்கும் முக்கிய திணைக்கள அதிகாரிகளும் இதில் பங்களிப்பு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதனால் நீங்கள் பங்களிப்பு தருவீர்கள் என நினைக்கின்றேன். எனது நகரசபை பதவிக்காலத்தில் கிண்ணியாவில் நிலைத்து நிற்கும் சேவைகளையும், அழகுபடுத்தும் விடயத்தினையும் நிச்சயம் செய்தே தீருவேன். அத்தோடு கழிவுகள் அனைத்தையும் பசளைகளாக மாற்றும் நடவடிக்கை மிகவிரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது’ என தெரிவித்த நகரபிதா டொக்டர் ஹில்மி வருகை தந்திருந்தவர்களிடம் அதற்கான விடய உள்வாங்களையும் தேவைகளையும் எடுத்துரைத்தார்.
நடைபெற்ற திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் கிண்ணியாவை அழகுபடுத்தும் விடயம் சம்பந்தமான கலந்துரையாடலில் நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி, நகரசபை உறுப்பினர் பாஜல்; குத்தூஸ், நகரசபை முகாமைத்துவ உதவியாளர் எம்.ஐ. நிஜாம்தீன், கிண்ணியா உதவி பிரதேச செயலாளர் கே.ஏ.ரி,யு. ரூபவர்தன, எம்.எச்.எம்.ரிஸ்வி (M.O.H.), விஜேசேகர BFO, ஆரியவர்த்தன Adi.RFO. Trinco, செனவிரத்ன Coordinator CCD, பொலிஸ் அதிகாரி, கடற்படை அதிகாரி, சுகாதார பரிசோதகர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் இதில் கலந்து கொண்டனர்.




Leave a comment