வீடியோ இணைப்பு
லண்டன்: உலக நாகரிகம் துரித வளர்ச்சியடைந்துவரும் இவ்வுலகில் தற்பொழுது ஓர் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. கையடக்கத் தொலை பேசி கனவே இருந்திடாத 1938ல் அமெரிக்க பெண் அதிகாரி ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் சிரித்து பேசியவாறு செல்கின்றார்.
கறுப்பு வெள்ளை வீடியோ காட்சியில் வரும் இத்தகைய ஓர் காட்சி உண்மையானதே என இப்பெண்ணின் உறவினர் ஒருவர் உறுதிப்படுத்தி இருக்கின்றார். 1930 களில் அமெரிக்க தொழிற்சாலை ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோவிலேயே இந்த மர்மமான கருவி காண்பிக்கப்பட்டுள்ளது. கையடக்க தொலைபேசியே கண்டுபிடிக்கப்படாத அந்த காலத்தில் அவ்வாறான ஒரு கருவி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இச்சம்பவமானது உலக மக்களை இன்று பின்நோக்கிச் சிந்திக்க வைத்திருக்கின்றது.
எனினும் இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று 1928 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்லி சப்லினின் திரைப்படம் ஒன்றிலும் பெண் ஒருவர் கையடக்க தொலைபேசி போன்ற கருவி மூலம் உரையாடும் மர்மமும் இதுவரை தீர்க்கப்படவில்லை. முதலாவது கையடக்க தொலைபேசி 1970 களின் பின்னரே கண்டுபிடிக்கப்பட்டு, 1990களில் நடைமுறைக்கு வந்தன.
எனினும் அதற்கு முன்னர் இரண்டாம் உலகப் போரில் இருந்து வயர்லஸ் எனப்படும் வானொலி பேசிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. எனினும் இப்பெண் உபயோகிக்கும் குறித்த கருவி 1938ல் வயர்லஸ் ரேடியோ அமைப்பை ஒத்திருக்கவில்லை எனவும், இது தற்போது உலக நடைமுறையிலிருக்கும் கைத்தொலைபேசிக்கு ஒப்பானது எனவும் அதிசயத்தகவல்கள் கிளம்பி இருப்பதும் ஆச்சரியத்திற்குரியது.
அது மாத்திரமன்றி இப் பெண் அணிந்திருக்கும் ஆடை அக்காலத்துக்குரிய ஆடைகளில் பிரபலமானதொன்றாக இருப்பதாகவும், அக்கால கட்டத்திற்குரிய ஆடையாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.
அவர் ஓர் மருத்துவ தாதி எனவும், அவசர பிரிவுக்காக அவர் உபயோகித்திருந்தார் என கூறப்பட்டாலும், இப்படம் எடுக்கும் போது நான் ஓர் சிறுமியாகவே இருந்தேன். இதனால் மேலதிக எந்த தகவல்களும் என்னிடமில்லை எனவும் தற்போது முதுமையடைந்திருக்கும் இப்பெண்ணின் உறவுப் பெண்ணொருவர் கூறியிருக்கின்றார்.
ஓர் ‘டைட்டானிக்’ சம்பவம் போன்று இந்த சம்பவத்தையும் துருவி ஆராய்வதற்கு ஆய்வாளலர்கள் தற்பொழுது ஆர்வங்காட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![article-2301996-19058237000005DC-683_634x453[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/article-2301996-19058237000005dc-683_634x4531.jpg?w=150&h=101)
![article-2301996-190581A2000005DC-246_634x538[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/article-2301996-190581a2000005dc-246_634x5381.jpg?w=628&h=503)
![article-2301996-19058285000005DC-105_634x487[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/article-2301996-19058285000005dc-105_634x4871.jpg?w=630&h=461)
![article-2301996-19058237000005DC-683_634x453[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/article-2301996-19058237000005dc-683_634x4531.jpg?w=630&h=425)
Leave a reply to Jameel Cancel reply