ஆட்டம் போடாதடா மனிதா….மனிதா……

– டீன்

2013-03-26 10.31.02பிறப்பு  என்பதே  இறப்போடு இணைந்துள்ளது .

பிறப்புக்கும் இறப்புக்கும் ஏராளமான ஒற்றுமைகள்  உண்டு .

பிறந்த மனிதன் இறந்த போது தான் வாழ ஆரம்பிக்கின்றான். அவனது நிரந்தர  வாழ்க்கை ஆரம்பமாகின்றது.

அதற்குள் எத்தனை ஆட்டங்கள் , ஆடம்பரங்கள்.

ஆட்டம் போடாதடா மனிதா….மனிதா……………ஆட்டம் போடாதடா மனிதா….மனிதா……………

அவசரமாக அடங்கிப் போய்விடுவாய்  மனிதா.

உண்ணுவதற்கும் உறங்கு வதற்கும் உயா்ரகு பொருட்கள் உனக்கு

உன்  உற்ற சகோதரனின் உறங்குமிடத்தையாவது உற்று நோக்கிப் பார்……..?

உனக்கு உண்மைகள் புரியும்……

ஊண்டுவதற்கு ஒரு கோல்,

உண்ணுவதற்கு ஒரு பாத்திரம்,

குடிப்பதற்கு ஓர் அழகிய குவளை……

அணிவதற்கு ஓர் பாதணி…………

அடையாளத்தை உறுதிப் படுத்த கையில்  ஓர் தொப்பி…..

பஞ்சு மெத்தைக்குப் பதிலாக ……

பசுமையான புற்றரை மேல் உன்னத உறக்கம்.

ஆட்டம் போடாதடா மனிதா….மனிதா……………

அவசரமாக அடங்கிப் போய்விடுவாய்  மனிதா.

Published by

Leave a comment