ஐ.தே.க தலைவர் ரணில் இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்

Yourkattankudy
Yourkattankudy

பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சனிக்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார். இவ்விஜயத்தில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் மட்டக்களப்பு வை. எம். சி. ஏ கட்டிடத்தில் இடம்பெற்ற மாதாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் மாதாந்த பொதுக் கூட்டம் அமைப்பின் தலைவர் வி கமலதாஸ் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் இணையம் அமைப்பின் எதிர்கால திட்டங்கள்இ நிதி நடவடிக்கைகள் என்பன பற்றியும் ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க,ஐக்கிய தேசியக் கட்சியின் சர்வவதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவர் சகால் ரட்நாயக்க,ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் பொருளாளருமான சுவாமிநாதன், ஐ.தே.க முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மாசிலாமணி, ஐ.தே.க மட்டு மாவட்ட அமைப்பாளர் சசிதரன் மற்றும் கட்சி உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment