புதிய பால நிர்மாண வேலைகளினால் வாகனநெரிசல்

By FM. Farhan
By FM. Farhan

பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு கல்லடி புதிய பால நிர்மாண வேலைகள் துரித கதியில் தற்போது இடம்பெற்று வருவதனால் தற்போது பாவனையிலுள்ள பாலத்தினால் செல்லும் பயணிகள் வாகனங்களின் சாரதிகள் பல்வேரு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக காலை நேரங்களில் வாகனநெரிசலினால் மக்கள் அவதிப்படுவதுடன் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்து பயணங்கைளை மேற்கொள்கின்றனர். இதனால் காரியாலயங்களுக்குச் செல்லும் அரசாங்க ஊழியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக மோட்டார் போக்குவரத்து ஊழியர்கள் குறித்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். புதிய பாலத்தின் நிர்மாணப் பணிகள் இரவு பகல் பாராது இடம்பெற்று வருகின்றது.

இம்மாதம் 22ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இப்புதிய பாலம் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment