
றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் தலைப்பிலான நூல் மற்றும் இறுவெட்டு என்பன வெள்ளிக்கிழமையன்று (01.03.2013) காத்தான்குடியில் வெளியிடப்பட்டன.
இதற்காக உதவிய அனைவருக்கும் மிகையான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அந்த வகையில் இந்த நூலை வெளியிடுவதற்காக எல்லாவகையிலும் உதவிய இறைவனுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதுடன், இந்த நூலையும், இறுவெட்டையும் வெளியிடுவதற்காக இதன் தொகுப்பாளராக இருந்து செயற்பட்ட காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம். நூர்தீன் மற்றும் மீடியா போரத்தின் அங்கத்தவர்களுக்கும் அதன் வெளியீட்டு குழுவுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த நூலிலுள்ள கட்டுரைகள் மற்றும் ஆக்கங்கள் செய்திகள் என்பவற்றை பிரசுரிப்பதற்கு அனுமதியளித்த ஊடகங்களான தமிழ் மிறர், காத்தான்குடி இன்போ, யாழ் முஸ்லிம், லங்கா முஸ்லிம், யுவர் காத்தான்குடி, ஆகிய இணையதளங்களுக்கும் அதன் நடாத்துனர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வீரகேசரி, விடிவெள்ளி, நவமணி, தினகரன், சுடர் ஒளி, எங்கள் தேசம், மீள் பார்வை தினமுரசு, கிழக்கு ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்களுக்கும் மற்றும் இதை எழுதியவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த நூலை வெளியிடுவதில் அடிக்கடி ஆரோக்கியமான ஆலோசனைகளையும் பங்களிப்பினையும் வழங்கிய ‘விடிவெள்ளி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைறூஸ், மற்றும் தமிழ் மிறர் இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஏ.எம். றிப்தி அலி, மற்றும் அல்ஹாஜ் ஏ.எம். சாதிக்கீன், அல்ஹாஜ் எஸ்.ஏ.கே. பலீலுர்றஹ்மான், எம்.ஐ.எம்.அன்வர், எம்.எம்.டீன் பைறூஸ், அல்ஹாஜ் கபீர் எம்.ஹஸன் அட்டைப் படத்திற்காக சகோதரி மர்ஹுமா றிஸானாவின் படத்தை வரைந்து தந்த ‘வீரகேசரி’ பத்திரிகையின் காட்டூன் ஓவியர் கனிவுமதி, அட்டைப் பக்கங்களை கிராபிக்ஸ் வடிவமைத்து மிகவும் சிறப்பாக தயாரித்து தந்ததுடன் வெளியீட்டு விழா அழைப்பு மற்றும் பெணர், இறுவெட்டு முகப்பு என்பவற்றை வடிவமைத்து தந்த காத்தான்குடி MY Soft நிறுவன பணிப்பாளர் கே.எம். மஸாஹிம், இறுவெட்டு தயாரிப்பில் பொறுப்புடன் பல்வேறு சிரமங்களையும் தாங்கி செயற்பட்ட ஊடகவியாளர் எம்.ஏ.சீ.எம். ஜெலீஸ், மற்றும் ஏ.ஜி.எம். பௌமி படப்பிடிப்பாளர் எம்.வை.எம். யூனுஸ் ஆகியோருக்கும் இவ்விடத்தில் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகின்றோம்.
அதேபோன்று இந்த நூலுக்கான ஆசியுரைகளை மதிப்புடன் வழங்கிய காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ. அப்துல்லாஹ் ஆலீம் (றஹ்மானி) ஹஸரத், மூதூர் நத்வத்துல் உலமா அறபுக்கல்லூரியின் அதிபர் மௌலவி அல்ஹாஜ் எம்.எம். கரீம் ஹஸரத், ‘லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும்’நவமணி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம். அமீன், இந்நூலை அச்சிடுவதற்கு பண உதவிகள் வழங்கிய அன்புக்குரிய சகோதரர்கள், இந்நூலைச் சிறந்த முறையில் அச்சிட்டுத் தந்த காத்தான்குடி டொட்லைன் அச்சக உரிமையாளர் சகோதரர் ஏ.ஜே. அனீஸ் அஹமட், எமது இப்பெரும் பணியில் பங்கேற்று மூதூர் களத்தில் செயற்பட்டு உதவிய ஊடகவியலாளர் மூதூர் முறாசில், ஏ.டபிள்யு.எம். ஜிஹாத் ஆசிரியர், ஏ.ஏ. முஜீப் ஆகியோருக்கும் றிஸானாவின் குடும்பத்திறகும் எங்களுக்குமிடையில் இணைப்பு பாலமாக செயற்பட்ட கொழும்பைச்சேர்ந்த சகோதாரர் முகம்மட் மஹ்ரூப் ஆகியோருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
அதே போன்று இந்த நூலை வெளியிடுவதற்கு ஒரு சில சகோதரர்கள் அவர்களால் முடிந்த பண உதவியினை வழங்கினார்கள் அவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் நன்றிதெரிவிக்கின்றோம்.
இதன் வெளியீட்டு விழா வைபவத்திற்காக அழைப்புக்களை இலவசமாக அச்சிட்டு தந்த காத்தான்குடி டொட்லைன் அச்சக உரிமையாளர் சகோதரர் ஏ.ஜே. அனீஸ் அஹமட் அவர்களுக்கும் பெணர்களை இலவசமாக அச்சிட்டு தந்த அல் இனாறா நிறுவனத்தின் உரிமையாளரும் காத்தான்குடி மீடியா போரத்தின் பொருளாளருமான எஸ்.ஏ.கே. பலீலுர்றஹ்மான், மற்றும் வெளியீட்டு வைபவம் தொடர்பான துண்டுப்பிரசுரத்தை இலவசமாக அச்சிட்டு தந்த ‘யுவர் காத்தான்குடி’ எனும் இணையதளத்திற்கும், வெளியீட்டு வைபவத்திற்கான வீதி விளம்பரத்தை செய்வதற்காக முற்சக்கர வண்டியொன்றை இலவசமாக வழங்கிய காத்தான்குடி முற்சக்கர வண்டிகளின் சாரதிகள் நலன்புரி சங்கத்திற்கும், அதற்காகவும் விழாவுக்காகவும் ஒலி பெருக்கியினை வழங்கிய காத்தான்குடி எப்.எம். மஜீட் அவர்களுக்கும், மூதூரிலிருந்து றிஸானாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை காத்தான்குடிக்கு அழைத்து வந்து மீண்டும், மூதூருக்கு கொண்டு போய் அவர்களை விட்டு இதற்காக இலவசமாய் வாகனப்போக்குவரத்துக்களை வழங்கிய காத்தான்குடி தனியார் வேன் சாரதிகள் நலன் புரிச்சங்கத்திற்கும் இதற்கு இணைப்பாளராக இருந்து ஏற்பாடு செய்து தந்த காத்தான்குடி தனியார் வேன் சாரதிகள் நலன் புரிச்சங்கத்தின் உறுப்பினர் கலைஞர் அஸீஸ் மாமாவுக்கும், வெள்ளிக்கிழமையன்று பகள் றிஸானாவின் குடும்பத்திற்கும் வெளியூலிருந்து வருகை தந்த முக்கியஸ்த்தர்களுக்கும் பகள் போசனத்தை வழங்கிய காத்தான்குடி மீடியா போரத்தின் உப தலைவரும் காத்தான்குடி சம்மேளனத்தின் பிரதி செயலாளருமான ஏ.எம்.சாதிகீன், மற்றும்; இரவுச்சாப்பாடு என்பவற்றை ஏற்பாடு செய்த காத்தான்குடி மீடியா போரத்தின் பொருளாளர் எஸ்.ஏ.கே.பலீலுர்றஹ்மானுக்கும் இதன் வெளியீட்டு வைபவத்தில் சிறப்புரையாற்றிய புத்தளம் இஸ்லாஹிய்யா அறபுக்கல்லூரியின் விரிவுரையாளர் மௌலவி எச்.எம்.மின்ஹாஜ் இஸ்லாஹி அவர்களுக்கும் இந்த வைபவத்தில் கலந்து கொண்ட உலமாக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்த்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், ஏறாவூர் முக்கியஸ்த்தர்கள்,மூதூர் முக்கியஸ்த்தர்கள், உள்ளுர்; வெளியூர் ஊடகவியலாளர்கள், பத்திரிகைகளினதும் இணைய தளங்களினதும் ஆசிரியர்கள், இந்த வைபவத்தினை ஊடகங்களில் விளம்பரப்படுத்தியும் ஊடக அனுசரணையும் வழங்கிய தமிழ் மிறர், காத்தான்குடி இன்போ, யாழ் முஸ்லிம், லங்கா முஸ்லிம், யுவர் காத்தான்குடி, கல்குடா இன்போ, பெற்றி நியூஸ், வீரகேசரி மற்றும் விடிவெள்ளி, தினகரன், மெட்ரோ நவமணி டெய்லி மிறர், ஆகிய பத்திரிகைகளுக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் வைபவத்தை இலவசமாக வீடியோ ஒளிப்பதிவு செய்த ஊடகவியலாளரும் காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினருமான எம்.எஸ்.முகம்மட் சஜி, வைபவத்தின் அறிவிப்பாளர்களாக செயற்பட்ட அறிவிப்பாளர்களான எம்.அல்சான், ஜுனைத் ஆசிரியர், வீதி அவிப்பில் ஈடுபட்ட எம்.சலீம் வைபவத்தின் போது தொண்டர் சேவை வழங்கிய இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆண் பெண் தொண்டர்களுக்கும், வைபவத்திற்காக ஹிஸ்புல்லா மண்டபத்தை இலவசமாக வழங்கிய காத்தான்குடி பிரதேச செயலளார் எஸ்.எச்.முஸம்மில் மற்றும் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் ஆகியோருக்கும் வைபவத்தின் போது அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பு பிரதிகளை பெற்றவர்களுக்கும் வைபவத்தில் நூலின் அறிமுக உரைகளை நிகழ்த்திய மௌலவி எம்.எச்.புகாரி, விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ், தொகுப்புரையை நிகழ்த்திய றிஸாலா வாணொலியின் பணிப்பாளரும் மீடியா போரத்தின் உறுப்பினருமான கபீர் எம்.ஹசன் மற்றும் வைபவத்தில் கவிதைகள் மற்றும் பாடல்களை பாடியவர்களுக்கும் இந்த சந்தாப்பத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் நிகழ்ச்சியின் நேர இறுக்கம் காரணமாக இன்னும் சில கவிஞர்களுக்கு கவி பாடுவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை அதற்காக வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கடந்த ஜனவரி மாதத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட சகோதரி மர்ஹுமா ரிஸானா நபீக் அவர்களின் இவ்விவகாரம் காலப்போக்கில் நமது சமூகச் சரித்திரக் களத்திலிருந்து மறைந்து விடாது ஒரு ஆவணமாகப் பேணப்பட வேண்டும் என்ற தூய நோக்கிலேயே எமது அன்றாட ஊடகச் செயற்பாடுகளுக்கு மத்தியிலும் இந்நூலையும், இறுவெட்டையும் வெளிக் கொணர்வதற்காக நாம் கடுமையான முயற்சிகளை மேற் கொண்டோம் என்பதையும் இவ்விடத்தில் வலியுறுத்துவதோடு, எமது காத்தான்குடி மீடியா போரத்தின் இக்கனதியான கன்னி முயற்சியில் எம்மையும் மீறி ஏதாயினும் குறைகள், குற்றங்கள் ஏற்பட்டிருப்பின் அவற்றையும் வாசகர்களாகிய நீங்கள் மனங்களைந்து நிறைவு கொண்டு பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
அச்சிடப்பட்ட நூல்களில் கணிசமான நூல்கள் உள்ளதால் அவைகளையும் விற்பணை செய்வதற்கு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளோம். அதே போன்று மூதூரிலும், கொழும்பிலும் இதன் அறிமுக விழாக்களை நடாத்துவதற்கும் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
நூல் வெளியீடு தொடர்பான கணக்கறிக்கையினை ஊடகங்களில் பகிரங்கமாக பிரசுரிக்கவுள்ளோம்.
அல்லாஹ் நமது தூய பணிகளை அங்கீகரிப்பானாக, ஆமீன்!
மீண்டுமொரு முறை நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
நன்றி
இவ்வண்ணம்
மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்த்தபா ஜே.பி. (ஊடகவியலாளர்,)
செயலாளர்,
மீடியா போரம்,
காத்தான்குடி
Leave a comment