– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேமளன கலை கலாசாரக் குழுவினால் ‘இஸ்லாமிய வரையறை பேணி கலை கலாசார நிகழ்வுகளை எவ்வாறு நடாத்தலாம்’ ‘இஸ்லாமிய நுண்கலையும் அவற்றைப் பாதுகாப்பதன் அவசியமும்’ எனும் தலைப்புக்களில் விஷேட கருத்தரங்கொன்று இன்று 03.03.2013 ஞாயிற்றுக்கிழமை சம்மேளன அஷ்ஷஹீத் அஹமட் லெப்பை ஞாபகாரத்த மாநாட்டு மண்டபத்தில் காலை 09.00மணிக்கு பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேமளன கலை கலாசாரக் குழுவின் தலைவர் பாவலர் சாந்தி முகைதீன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விஷேட கருத்தரங்கில் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ்இபிஸ்மி அல் குர்ஆன்பாடசாலை பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.பிர்தௌஸ்(நளீமி) ஆகியோரினால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் தொடக்கவுரையை கவிமணி எம்.எச்.எம்.புஹாரி(பலாஹி)நடாத்தினார்.
இக்கருத்தரங்கில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன உப தலைவர் அப்துல் ஜவாத் பீ.ஏ , பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் அப்துல் காதர்(பலாஹி), காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் சுபைர்இகாத்தான்குடி லஜ்னதுஸ் ஸுன்னா அமைப்பின் தலைவர் அஷ்.ஷெய்க் றிழ்வான்(மதனி), சம்மேளன உப செயலாளர் சாதிக்கீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அது மட்டுமன்றி இக்கருத்தரங்கில் காத்தான்குடியிலுள்ள ஒவ்வொரு பாலர் பாடசாலை சார்பிலும் ஆசிரிய ஆசிரியைகளும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

பிரதேசத்தில் இடம்பெறுகின்ற முன்பள்ளி பாடசாலைகளின் கலை விழாக்கள் மற்றும் ஏனைய விழாக்கள் என்பவற்றில் இஸ்லாத்திற்கு முரணான அம்சங்கள் இடம்பெறாமலிருப்பதற்கும் அவற்றுக்கு மாற்றீடாக இஸ்லாமிய ஷரீஆ அனுமதிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு வழிகாட்டும் முகமாகவும் இஸ்லாமிய நுண்கலை பற்றிய அறிவினை எமது இளம் சந்ததியினருக்கு வழங்கி அவற்றை வளர்ப்பதற்காகவுமே இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Leave a comment