ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மணிவிழா மலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. மணிவிழா மலரை கருணாநிதி வெளியிட திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பெற்றுக் கொண்டார்.
மணிவிழா மலரை வெளியிட்டுப் பேசிய கருணாநிதி, வரும் பார்லிமென்ட் தேர்தலில் திமுக அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனியே தீர்மானம் கொண்டுவரத் தேவையில்லை. அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இது தொடர்பான இந்தியாவின் முடிவை எதிர்பார்க்கிறோம். எங்களது உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொண்டு செயல்படும் என நம்புகிறோம் என்றார் அவர்.
![karunanidhi_350_120512033848[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/01/karunanidhi_350_1205120338481.jpg?w=150&h=96)
Leave a comment