நாளுக்கு நாள் முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகள் தலைவிறித்தாடுகின்ற நிலையில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது பிழையானது என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முஸம்மில் தெரிவித்துள்ளமை வேடிக்கையாக உள்ளது. ஸ்ரீ .ல.மு.கா மட்டு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே. றம்ழான்

– பழுளுல்லாஹ் பர்ஹான்

Member of Batticaloa Municipal Council
BY: FM. Farhan

நாளுக்கு நாள் முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகள் தலைவிறித்தாடுகின்ற நிலையில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது பிழையானது என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முஸம்மில் தெரிவித்துள்ளமை அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாகவும்  பௌத்த இனவாதிகளிடம் நற்சான்றிதழ் பெற்றுக் கொள்கின்அரசியல் வாதியாகவும் தன்னைக் காட்டிக்கொள்வதற்காக  ஒரு முஸ்லிமின் கருத்தாக இருக்க முடியாது என மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே. றம்ழான் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள வன்மையான கண்டனத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரது கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது

இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக அநீதிகளும் நெருக்கடிகளும் பாரிய ஆர்ப்பாட்டங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டு பள்ளிவாயல் உடைப்பு, பாங்கு சொல்வதற்கு தடை, முஸ்லிம்களின் குடியிருப்புகளுக்கு அச்சுறுத்தல், வியாபாரம் செய்வதை தடுத்தல், வர்தக நிலையங்களுக்கு எதிரான வன்முறைகள், ஹாலால் சான்றிதழ்களுக்கு எதிரான போராட்டங்கள், காதி நீதிமன்றத்திற்கு எதிர்ப்பு, இஸ்லாமிய வங்களுகளுக்கு  எதிர்ப்பு, பர்தா அணியத் தடை, பள்ளிவாயல்களுக்கு கல்வீச்சு, பர்தா அணியும் மாணவிகள் மீது தாக்குதல், மாடு அறுப்பதற்கு தடை என பௌத்த இனவாதிகளின் அடாவடித்தனமும் அடக்குமுறையும் நாளுக்கு நாள் தலைவிறிதாடுகின்ற இக்கால கட்டத்தில் முஸ்லிம் சமூகம் சார்ந்து அதற்கெரிராக குரல் கொடுக்க வேண்டிய கௌரவ கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் (புர்கா) அணிவது பிழையானது என தெரிவிப்பதை நான் மிக வன்மையாக கண்டிக்கின்றேன்

முஸ்லிம்களுக்கு எதிராக இன்று திட்டமிட்ட வகையில் எத்தனையோ அநீதிகளும் அடக்குமுறைகளும் கட்டாயமாக தினிக்கப்பட்டு வருகின்றது. அதனை தடுத்து நிறுத்துவதற்கு எதிராக  குரல் கொடுக்க வேண்டியவர் மாநகர சபை உறுப்பினர் இன்று முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது  பிழையானது என கருத்து தெரிவிப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

புனித இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படையில் இந்த நாட்டில் வாழ்கின்ற எமது முஸ்லிம் பெண் சகோதரிகளை வாழவும் அதன் படி வழி நடத்தவும் வேண்டும் என்பதற்காக எமது கன்னியத்திற்குறிய உலமாக்கள் தங்களை மிகவும் தியாகம் செய்து இன்று அதிகமான எமது சகோதரிகளை ஹிஜாப் அணிய வைத்து வருகின்றனர். அவர்களது அளப்பெரிய அர்ப்பணிப்பின் பயனாக எமது பெண் சகோதரிகள் இன்று தனது மேனிகளை முழுமையாக மறைக்கும் ஹிஜாப் ஆடையை அணிந்து இஸ்லாமிய வாழ்க்கை வழிமுறைக்குல் வாழ்ந்து வருகின்ற இக்காலப்பகுதியில் அதனை மேலும் மேலும் ஊர்க்ப்படுத்தி எஞ்சியிருக்கின்றவர்களையும் அதன் அடிப்படையில் வாழ வழிவகுக்க வேண்டிய பாரிய பொறுப்புள்ள மாநகர சபை உறுப்பினர் எமது பெண் சகோதரிகளை புனித இஸ்லாம் மார்கத்திலிருந்து விடுபடச் செய்து  யுதர்களின் வாழ்கை வழி முறைக்கு இட்டுச் செல்லும் இஸ்லாத்திற்கு விரோதமான கருத்தினை எந்தவொரு உண்மையான முஸ்லிமும் ஏற்றுக் கொள்ள முடியாது

ஹிஜாப் அணியக் கூடாது என பேரினவாத சக்திகள் போராட்டங்கள் நடாத்தும் இக்கால கட்டத்தில் அதற்கு மேலும் வழி சேர்க்கும் வகையில் தெரிவிக்ப்பட்டுள்ள மாநகர சபை உறுப்பினரின் கருத்தினை உலமாக்கள் கண்டிக்க வேண்டும்  

பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் அவ்வாரான ஆடைகள் இல்லை என்றும் பங்களாதேஸ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஹிஜாப் அணிவதில்லை என்று கூறுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது அங்கு இருக்கின்ற அல்லது அந்த நாட்டை ஆள்கின்ற சிலர் அணியவில்லை என்பதற்காக முழுமையாக இந்த நாடுகளில் ஹிஜாப் அணிவதில்லை என்று கூறுவது நகைபுக்குறியது அத்தோடு அங்கு வாழ்கின்ற பெண்கள் ஹிஜாப் அல்லது புர்கா அணியவில்லை என்பதற்காக இலங்கையிலுள்ள முஸ்லிம் பெண்களும் ஹிஜாப் அணியத்தேவையில்லை என்று கூறுவது ஒரு முஸ்லிமுடைய கருத்தாக இருக்க முடியாது

முஸ்லிமாக இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கும் புனித இஸ்லாத்திற்கும் எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் சுய நலக்காரர்களின் விடயத்தில் மக்களும் உலமாக்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தங்களது பதவியை பாதுகாத்து அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாகவும்  பௌத்த இனவாதிகளிடம் நற்சான்றிதழ் பெற்றுக் கொள்கின்ற இவ்வாரான சுயநலமிக்க அரசியல் பிரமுகர்கள் இன்று இந்த நாட்டில் அதிகரித்து விட்டனர் முஸ்லிம்களுக்கு இன்னல்கள் ஏற்படும் போது அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய அல்லது தடுத்து நிறுத்த வேண்டியவர்கள் இன்று புனித இஸ்லாத்திற்கு மாறாக செயற்படுகின்றார்கள் இது அவர்களின் தவறா? அல்லது வாக்களித்த மக்களின் தவறா? இனிமேலும் இவர்களுக்கு வாக்களிக்கலாமா? என்பதை மக்கள் தான் சிந்;திக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by

One response to “நாளுக்கு நாள் முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகள் தலைவிறித்தாடுகின்ற நிலையில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது பிழையானது என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முஸம்மில் தெரிவித்துள்ளமை வேடிக்கையாக உள்ளது. ஸ்ரீ .ல.மு.கா மட்டு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே. றம்ழான்”

  1. ivarhal yahoothihalin agent conform.

Leave a reply to mohd fareed Cancel reply