– பழுளுல்லாஹ் பர்ஹான்

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்து பொறியியல் பீடம் மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்திற்கான கட்டடத் தொகுதியையும் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
அத்துடன் குவைத் அரசின் 600 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 700 மாணவர்கள் தங்கக் கூடிய விடுதிக் கட்டிடம், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்திற்கான கட்டிடத் தொகுதியை திறந்து வைத்தல், சுகாதார நிலையம் அங்குரார்ப்பணம், நிர்வாக மற்றும் விரிவுரை மண்டபம் உள்ளிட்ட கட்டிடத் தொகுதிகள் எனவற்றையும் ஜனாதிபதி இதன்போது திறந்து வைத்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, குவைத் நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹெஷன் அல் வக்காயன், அமைச்சர்கள் ஏ.எல்.எம்.அதாவுல்லா, ரவூப் ஹக்கீம், பி.தயாரத்ன, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத் மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, விமலவீர திஸாநாயக்க, எம்.மன்சூர், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், குவைத் நாட்டின் பிரதிநிதிகள் என பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது குவைத் நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹெஷன் அல் வக்காயனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.
Leave a comment