திருமண சீா்திருத்தம் தொடா்பான விசேட மஸூறா

federation
BY: Deen Fairoos

டீன் பைரூஸ்.

ஒரு சமூகத்தின் நலனுக்காக தன்னாலான பங்களிப்பினை செய்வது உண்மையான விசுவாசியின் அடையாளமாகும். காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பாரிய முயற்சியில் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் வழிகாட்டலில் திருமண சீர்திருத்தம் தொடா்பான கலந்துரையாடல் ஒன்று சென்ற (01.02.2013 வெள்ளிக்கிழமை) அஷ்-ஷஹீட் அல்ஹாஜ் ஏ அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தினில்  நடை பெற்றது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவா் அல்ஹாஜ்.மர்சூக்  அஹமட் லெப்பையின் தலைமையில் நடை பெற்ற இக்கலந்துரையாடலில் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவா் மௌலவி அல்ஹாஜ்.ஏ.எம்.அலியார் (பலாஹி) உட்பட பல உலமாக்கள் ,சம்மேளன பிரதி நிதிகள்,பள்ளிவாயல்களின் நிர்வாக சபை உறுப்பினா்கள் என பலரும் கலந்து கொண்டனா்.

காத்தான்குடியில் தற்போது இருக்கும் திருமண  விடயம் தொடா்பான சடங்கு ,சம்பிரதாயம், இஸ்லாத்துக்கு விரோதமான செயல் பாடுகள், திருமணம் பேசிய பின்னர் இரு தரப்பாரும் நடந்து கொள்ளும் முறை போன்ற பல் வேறு விடயங்கள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பான இறுதித் தீா்மானம் பொது மக்களுக்கு பள்ளிவாயல்கள் ஊடாக அறிவிக்கப்படவுள்ளதாகவும்  அறிய முடிகின்றது.  OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

Published by

Leave a comment