கமல் – அரசு – இஸ்லாமிய தலைவர்கள் பேச்சுவார்த்தை!

-OIT

30-ameer42-300[1]விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர் எதிர்க்கும் காட்சிகளை நீக்குதல் குறித்த முத்தரப்பு பேச்சு வார்த்தை தொடங்கியது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தையில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கமல்ஹாஸன், அவரது அண்ணன் சந்திரஹாஸன் ஆகியோர் நேரில் பங்கேற்றுள்ளனர்.

இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 24 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரும் இந்த பேச்சில் பங்கேற்றுள்ளனர்.

மாலை 3 மணிக்குத் தொடங்கிய பேச்சு வார்த்தை சுமுகமாக நடப்பதாக கமலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்று இரவுக்குள் இறுதி முடிவு தெரிந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Published by

Leave a comment